நாமக்கலில் 13 வயது பள்ளி சிறுமி ஷவர்மா உணவு சாப்பிட்டு உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தி உடனடியாக உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.அனைத்து அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.அனுராதா காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா காந்தி சாலை , கிழக்கு ராஜ வீதி, காமராஜர் வீதி , காமாட்சி அம்மன் சந்நிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஷவர்மா உணவகங்கள் மற்றும் அசைவ உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் படிக்க | பாஜக நிர்வாகியும், பிரபல ரவுடியுமான பிரீ வெங்கடேசன் கொலை! நடந்தது என்ன?
அந்த வகையில் காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் பகுதியிலுள்ள SRB ஹைதராபாத் பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொண்ட போது நாள் ஆன இறைச்சிகளையும், பாஸ்ட் புட் தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதம் ஆகியவற்றை பதப்படுத்தி விற்பனை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கடையின் மேனேஜரை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு இதை கொடுப்பீர்களா, பணம் கொடுத்து தானே வாங்குறாங்க, ஓசிலையா கொடுக்குறீங்க என சராமாரியாக கேட்க மூஞ்சை தொங்கபோட்டே இருந்தனர். இதனையெடுத்து அவ்வுணவுகளை கொட்டி கிருமி நாசினிகள் கொண்டு அழித்து பறிமுதல் செய்தார். உணவு பாதுகாப்பு அதிகாரி உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையிலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்து கொண்டு உண்டும் மகிழ்ந்தனர்.
உணவகங்களில் சமையல் கூடம், உணவுப்பதப்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டி, வாடிக்கையாளர்களுக்கு அளிக்க தயாரிக்கப்பட்டிருந்த சில உணவு மாதிரிகளை எடுத்து சென்ற அகிகாரிகள் அவற்றை பரிசோதனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு நான்கு உணவுகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, 23 உணவகங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மூன்று உணவகங்களுக்கு ரூ 6 ஆயிரம் ரூபாய் அபராதமும், பயன்படுத்தக் கூடாத வகையில் இருந்த 28 கிலோ உணவுப் பொருட்களையும் டாக்டர் அனுராதா பறிமுதல் செய்தார்.
இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 62 உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு ஏழு உணவுகளுக்கு தரம் குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 49 உணவகங்களில் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு சேகரிக்கப்பட்டும், இரண்டு கடைகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தும், உணவுக்கு பயன்படுத்தக் கூடாத 26 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர். பொதுவாகவே உணவகங்களில் உணவுப் பொருட்களை பல நிலைகளில் பாதுகாத்து மீண்டும் அதை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதாலே அதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | கட்சியின் தலைவராக இருப்பவருக்கு பொறுமை அவசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ