கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே விவரிக்க முடியாத திடீர் மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ICMR ஆய்வு கூறுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமான இளைஞர்களின் திடீர் மரணங்களின் நிகழ்வு தொடர்பான காரணங்களை ஆராய்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தற்போது, திடீர் மரணங்களுக்கும் கோவிட் தடுப்பூசிக்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. 



மேலும், COVID19 தடுப்பூசி திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை; அது உண்மையில் ஆபத்தை குறைத்தது என்று கூறும் இந்த ஆய்வறிக்கை, கோவிட்-19 பாதிப்பின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, திடீர் மரணம் அடைந்தவர்களின் குடும்ப வரலாறு, உணவு பழக்கம், மது அருந்துதல், தீவிர பழக்கமில்லாத செயல்பாடு ஆகியவை திடீர் மரணம் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க | நிலத்தடியில் விளைந்தாலும், உடல் ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஊக்கப்படுத்தும் 5 காய்கறிகள்


2020ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது கொரோனா பெருந்தொற்று உலகையே முடக்கி, அதிலிருந்து மக்கள் தற்போது வெளியே வந்துள்ள நிலையில், இளம்வயது மரணங்கள் திடீரென அதிகரித்தது. அதற்கு காரணம் கொரோனா வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக போடப்பட்ட தடுப்பூசிகள் என்று வதந்தி பரவிய நிலையில், இந்த சந்தேகத்தை ஆராய ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வு தற்போது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.


இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருவது கவலைகளை அதிகரித்துள்ள நிலையில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு வராமல் இருக்க குறிப்பிட்ட காலம் வரை கடின உழைப்பு அல்லது கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது. அதற்கும், கோவிட் தடுப்பூசிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 


கொரோனா உலகில் இருந்து சென்ற பின்னரும், அதனையொட்டிய மரணங்கள் தொடர்வதாக பேசப்பட்டு வந்த நிலையில், அந்த அச்சங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்படுள்ளது. எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லாத இளைஞர்கள், திடீரென மரணமடைந்தபோது ஏற்பட்ட பீதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க | பச்சைப் பூண்டில் இவ்வளவு நன்மைகளா? உடல் எடையை கச்சிதமாக்கும் உள்ளி பூடு


இதனிடையே இளம்வயதினரிடையே நிகழும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமா என்றறிய ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான’ ஐசிஎம்ஆர் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.


அக்டோபர் 1, 2021  முதல் 2023 மார்ச் 31 வரையில் விவரிக்கப்படாத காரணங்களால் திடீரென இறந்த 18 முதல் 45 வயதுடைய ஆரோக்கியமான நபர்களின் தரவுகள் இந்த ஆய்வில் அலசி ஆராயப்பட்டன. 


இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட ஐசிஎம்ஆர் ஆய்வின் முடிவுகள், இளம் வயதினரின் திடீர் இறப்புக்கு கொரோனா தடுப்பூசிகள் காரணமல்ல என்கிறது. கடுமையான கொரோனா பாதிப்பின் பிந்தைய பக்கவிளைவுகள், அதிகப்படியான குடி, இதர மருந்துகள் அல்லது மருத்துவப் பயன்பாடுகள் ஆகியவையே திடீர் மரணங்களின் பின்னணியாக உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.


நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த ஆய்வு முடிந்த நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ