நிலத்தடியில் விளைந்தாலும், உடல் ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஊக்கப்படுத்தும் 5 காய்கறிகள்

Healthy Winter Diet: இன்றியமையாத குளிர்கால உணவுகள், நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உற்சாகப்படுத்தவும் உதவும். அதிலும் நிலத்தடியில் விளையும் 5 வேர் காய்கறிகளை தவிர்க்க வேண்டாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 21, 2023, 06:14 AM IST
  • நிலத்தடியில் விளையும் காய்கள்
  • வேர் காய்கறிகளை தவிர்க்க வேண்டாம்
  • குளிர்கால உணவு டயட்
நிலத்தடியில் விளைந்தாலும், உடல் ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஊக்கப்படுத்தும் 5 காய்கறிகள் title=

குளிர்காலம் தொடங்கும் போது, பல்வேறு குளிர்கால ​​காய்கறிகளும் நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க வந்துவிடுகின்றன. ஒவ்வொரு பருவத்திலும் நமக்குத் தேவையானதை இயற்கை வழங்குகிறது என்பதை நினைவூட்டும் இயற்கையின் கொடைகளில் முக்கியமானவை காய்கறிகள். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தனிப்பட்ட ஆரோக்கிய நலன்களையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.

இயற்கையின் குளிர்கால காய்கறிகள் நமக்கு கிடைத்தாலும், அதில் நாம் அடிக்கடி சில காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். இவை தற்போது அனைத்து சீசன்களிலும் கிடைத்தாலும், இந்த குளிர்காலத்தில் அவற்றை உண்ணும்போது கிடைக்கும் அளப்பறிய ஆரோக்கிய நன்மைகள் (Root Vegetables To Boost Metabolism), நோயில்லாமல் வாழ வைக்கும்.

குளிர்கால காய்கறிகள் இப்போது ஆண்டின் அனைத்து நாட்களிலும் கிடைக்கிறது. இருப்பினும் இப்போது சாப்பிட்டால் அவற்றின் நன்மைகள் அதிகமாக இருக்கும். அதேபோல, பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை சிலர் தவிர்ப்பார்கள். ஆனால் அது சரியல்ல. காரணம், அக்காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.

மேலும் படிக்க | உடல் எடையை சட்டுன்னு குறைக்கும் மேஜிக்கல் பானங்கள்! சிம்பிள் வெயிட் லாஸ் டிப்ஸ்

அந்த வகையில் நிலத்தடியில் விளையும் சில காய்கறிகளில் பொதிந்துள்ள ஊட்டச்சத்துக்களையும், அவை உடலுக்கு கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்துக் கொள்வோம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: நார்ச்சத்து, வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல ஆதாரம் ஆகும். அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் அந்தோசயினின்கள் உட்பட, இது மூளை ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகவும் ஆரோக்கியமான குடலுக்கான உணவாகவும் அமைகிறது.

root veg

கேரட்: கேரட்டில் உள்ள கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டு, பாலிஅசெட்டிலின்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆன்டிகார்சினோஜென்கள் மற்றும் நோயெதிர்ப்பை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  கேரட் கண்களுக்கு சிறந்தது என்பதுடன், இதில் நிறைந்துள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களின் மகிமையால், சிறு குழந்தைகளுக்குக் கூட கேரட்டை வேகவைத்து மசித்து கொடுப்பது நல்லது. 

மேலும் படிக்க | வாய் பிளக்க வைக்கும் கேரட் நன்மைகள்! நோயே இல்லாம வாழ பெஸ்ட் சாய்ஸ் Carrot 

பீட்ரூட்: மிகவும் சத்தான வேர் காய்கறிகளில் ஒன்று. பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம். நன்மை பயக்கும் தாவர கலவைகளான நைட்ரேட்டுகள், இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகின்றன, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பீட்ரூட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

இஞ்சி: ஜிஞ்சரால் இஞ்சி எனப்படும் ஒரு குறிப்பிட்ட கலவை உட்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இஞ்சி, ஒரு சிறந்த கார்மினேட்டிவ் (குடல் வாயுக்களை வெளியேற்றுவதை ஊக்குவிக்கும் ஒரு பொருள்) என்பது பலருக்குத் தெரியாது. குடல் ஸ்பாஸ்மோலிடிக் (spasmolytic) எனப்படும் குடலைத் தளர்த்தி அமைதிப்படுத்தும் இஞ்சியை குளிர்காலத்தில் மட்டுமல்ல, எந்த நாலும் தவிர்க்கவேக்கூடாது. இஞ்சியை அடிக்கடி பயன்படுத்தினால், ஒற்றைத் தலைவலி ஏற்படாது. 

டர்னிப்: டர்னிப் ஒரு சத்தான வேர் காய்கறியாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக இருக்கும் டர்னிப், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

மேலும் படிக்க | கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் நோய் தீர்க்கும் மருந்தான காய்கறிகள்

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் தகவல்களுக்காகவே. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News