Novus RT-PCR Kit: அனைத்து ஒமிக்ரான் வகைகளையும் 45 நிமிடங்களில் கண்டறியும்
கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் மற்றும் அதன் அனைத்து துணை மாறுபாடுகளையும் விரைவில் கண்டறிய உதவும் புதிய RT-PCR கருவிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவின் டெல்டா மற்றும் ஓமிக்ரான் உள்ளிட்ட அனைத்து வகைகளையும் வெறும் 45 நிமிடங்களில் கண்டறிய முடியும். KRIVIDA Novus RT-PCR கிட் என்று பெயரிடப்பட்ட இந்தப் புதிய கருவி மூலம் Omicron மாறுபாடுகளைக் கண்டறிவதற்கான மரபணு வரிசைமுறை சோதனைக்கான நேரம் மற்றும் கட்டணம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரான் நோய்த்தொற்றைக் கண்டறிய, குறைந்தது 5-7 நாட்கள் ஆகும். அதோடு சோதனை செய்ய சுமார் 5 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், புதிய RT-PCR கிட் மூலம், Omicron வகைகளை துல்லியமாக பரிசோதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இம்முஜெனிக்ஸ் பயோசயின்ஸ் ( ImmuGenix Bioscience ) நிறுவனத்துடன் இணைந்து இந்த கிட் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறுவத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் நவீன் குமார் வெங்கடேசன் இது குறித்து கூறுகையில், கிரிவிடா நோவஸ் கிட், S-Gene மூலம் Omicron வகைகளைக் கண்டறியும். கிட் அனைத்து துணை வகைகளான BA.1, BA.2 மற்றும் BA.3 of Omicron (B.1.1.529) ஆகியவற்றை துல்ல்லியமாக கண்டறிய முடியும். இதுவரை பழைய கிட் மூலம் செய்து வந்த அதே பரிசோதனையை இந்த புதிய கிட் மூலம் செய்யலாம் என தெரிவித்தார்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
க்ரியா மருத்துவ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். சண்முகப்ரியா இது குறித்து கூறுகையில், புதிய RT-PCR கிட், SARS-COV-2 வைரஸின் நான்கு மரபணுக்களையும் ஒரு மனித மரபணுவையும் அடையாளம் காட்டுகிறது. அனைத்து பழைய RT-PCR கருவிகளும் SARS-CoV-2 வைரஸின் மூன்று மரபணுக்கள் வரை கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன என்றார். அதே நேரத்தில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் அனு மோடூரி கூறுகையில், இதுவரை சந்தையில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து ஆர்டி-பிசிஆர் கிட்களுடன் ஒப்பிடும்போது இந்த புதிய கிட் மிகவும் சிக்கனமானது என்றார். இருப்பினும் அவர் விலை குறித்த தகவலை வெளியிடவில்லை.
கொரோனா தொற்று பரவல் (Corona Virus) தொடங்கி கிட்டத் தட்ட இரண்டு ஆண்டுகாலம் ஆகி விட்ட நிலையில், இன்று உலகம் அதன் பிடியில் இருந்து மீளவில்லை. சாமான்ய மக்கள் முதல், நாட்டில் முக்கிய தலைவர்கள் வரை அனைவரும், இதனால் நேரிடையாகவே, மறைமுகமாவோ பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Omicron: Immunity அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வம் கல்லீரலை டேமேஜ் செய்யும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR