இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய அறிக்கை, அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs), இரத்தத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், நிமோனியா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்னும் ஆண்டிபயாடிக் மருந்துகள் சரியாக வேலை செய்வதில்லை என ICMR வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

E.coli பாக்டீரியாக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளான cefotaxime, ceftazidime, ciprofloxacin மற்றும் levofloxacin ஆகியவை 20% என்ற அளவிற்கும் குறைவான செயல்திறனை கொண்டுள்ளன என அறிக்கை கூறுகிறது. பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறன் காலப்போக்கில் குறைந்துவிட்டது எனவும் ICMR அறிக்கை கூறுகிறது. 


எடுத்துக்காட்டாக, பைபராசிலின் - டாசோபாக்டாமின் ஆகிய மருந்துகளின் செயல்திறன் 2017 ஆம் ஆண்டில் 56.8% என்ற அளவில் இருந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் 42.4% ஆகக் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமிகாசின் மற்றும் மெரோபெனெம் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கூட சிறப்பாக வேலை செய்வதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.


உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய கிராம் - நெகட்டிவ் பாக்டீரியா (Gram-negative bacteria) இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் நோய்க்கிருமிகளில் ஒன்றாகும். இது தவிர, வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை குடல் அழற்சி போன்ற நோய்களை ஏற்படுத்தும் சால்மோனெல்லா டைஃபி (Salmonella typhi) பாக்டீரியா ஆகிய பாக்டீரியாக்கள், ஃப்ளோரோக்வினொலோன்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிராக 95% க்கும் அதிகமான அளவில் போராடும் திறனை உருவாக்கியுள்ளது என்றும் இது நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.


மேலும் படிக்க | Mpox Clade 1b: குரங்கு அம்மையின் ஆபத்தான வகை இந்தியாவில்... துரித கதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


நுண்ணுயிர் எதிர்ப்பி பிரச்சனையை தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடு தேவை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்தில் நுண்ணுயி எதிர்ப்பு மருந்துகளை தேவையில்லாமல் பயன்படுத்துவதை தடுக்க, கடுமையான நெறிமுறைகளை கடைபிடிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் எனவும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என ICMR அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நாட்டில் அதிகரித்து வரும் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டில் உள்ள தவறுகளை ICMR சுட்டிக்காட்டுகிறது. இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கிறது ICMR.


மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) நடத்திய முந்தைய ஆய்வில், இந்தியாவில் பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் கிட்டத்தட்ட பாதி  அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செயல்திறன் குறைவாக இருப்பாதாக கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை தரும்... மருத்துவமனைகளை கண்டறிவது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ