புற்று நோயை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்... எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புக்கான காரணம், பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (PFOS) ஆகிய இரு ரசாயனங்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 30, 2024, 01:28 PM IST
  • நான் ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் ஆபத்தான ரசாயனம்.
  • பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம், ஒரு வகை நச்சு இரசாயனம், நான் ஸ்டிக் பாத்திரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.
புற்று நோயை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்... எச்சரிக்கும் நிபுணர்கள்..!! title=

Side Effects of Non Stick Cookware: உலக அளவில் நான் ஸ்டிக் பாத்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அடி பிடிக்காது, குறைந்த எண்ணெய் பயன்பாடு, சுத்தம் செய்ய எளிது போண்ற பல வகையான காரணங்களுக்காகவே இதை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு, சமீபத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்தது. 

நான் ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் ஆபத்தான ரசாயனம்

நான் ஸ்டிக் பாத்திரங்களில் காணப்படும் PFOA பல கடுமையான நோய்களை வரவழைக்கும் என கூறப்படுகிறது. நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால், தைராய்டு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிக அளவில் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புக்கான காரணம், பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (PFOS) ஆகிய இரு ரசாயனங்கள். இவை டெஃப்ளான் போன்ற நான் - ஸ்டிக் பூச்சுக்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் - ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்படும் போது, ​​இந்த இரசாயனங்கள் நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடுகின்றன. இதனால் அவற்றுடன் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு சுவாச பிரச்சனைகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உட்பட பல நோய்கள் ஏற்படலாம்.

மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனை இருக்கா..... நீங்கள் செய்ய வேண்டியதும்... செய்யக்கூடாததும்...!

நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் ரசாயனங்கள்

பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம், ஒரு வகை நச்சு இரசாயனம், நான் ஸ்டிக் பாத்திரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. நான் ஸ்டிக் பாத்திரங்களில் உணவை சமைத்தால், இந்த நச்சு இரசாயனங்கள்  உணவில் மூலம் உடலில் கலந்து, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க, நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

கருவில் உள்ள சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்

கர்ப்ப காலத்தில் சமையலுக்கு நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கர்ப்ப காலத்தில் இரசாயனங்கள் அடங்கிய நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு பதிலாக இயற்கையான பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ண வேண்டும்.

நான்-ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள பூச்சு

உங்கள் நான்-ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள பூச்சு சேதமடைந்திருந்தால், அது மிகவும் ஆபத்தை வரவழைக்க கூடியது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த விரும்பினால், பக்கவிளைவுகளின் தீவிரத்தைக் குறைக்க குறைந்த தீயில் உணவை சமைக்க வேண்டும். மேலே உள்ள கோட்டிங் உறிந்து வருவதுபோல் அல்லது உடைவது போல் இருந்தால் உடனே புதிதாக ஒன்றை வாங்கி விட வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News