ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை தரும்... மருத்துவமனைகளை கண்டறிவது எப்படி

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை பெறுவதில் உதவும் வகையில் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்னும் இலவச காப்பீட்டு திட்டத்தை வருகிறது. இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2024, 12:50 PM IST
  • உங்கள் நகரத்தில் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவமனையை கண்டுபிடிக்கும் முறை.
  • குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
  • ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிக்கும் முறை.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை தரும்... மருத்துவமனைகளை கண்டறிவது எப்படி title=

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகள் விபரம்: நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை பெறுவதில் உதவும் வகையில் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்னும் இலவச காப்பீட்டு திட்டத்தை வருகிறது. இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 70 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் இந்த திட்டத்தை பெற சில தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில், தேசிய காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்கி சுகாதார பாதுகாப்பை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இது ஒரு குடும்பத்திற்கான இலவச காப்பீட்டு தொகையாகும். சாமான்ய மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் திட்டத்தின் (Ayushman Bharat Scheme) பலனைப் பெற, ஆயுஷ்மான் திட்டத்துடன் தொடர்புடைய எந்த அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்

ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட மருத்துவமனையைக் கண்டுபிடிப்பது எளிது. இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் இலவச சிகிச்சையைப் பெற விரும்பினால், முதலில் உங்கள் நகரத்தில் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நகரத்தில் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை அறிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் நகரத்தில் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவமனையை  கண்டுபிடிக்கும் முறை

1. ஆயுஷ்மான் பாரத் இணையதளமான pmjay.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

2. 'Find Hospital' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3. இந்த ஆப்ஷனில் உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் மருத்துவமனை வகையைத் தேர்ந்தெடுக்கவும் ( அரசு அல்லது தனியார் மருத்துவமனை) .

4. நீங்கள் எந்த விதமான நோய்க்கு சிகிச்சையளிக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

4. இதனுடன், Empanelment Type என்னும் ஆப்ஷனில் PMJAYஐத் தேர்ந்தெடுக்கவும்.

5. அதன் பிறகு, திரையில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, தேடலைக் கிளிக் செய்யவும்.

6. இப்போது நீங்கள் ஆயுஷ்மான் யோஜனாவில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலைக் காண்பீர்கள். இந்த மருத்துவமனைகளில் எந்தெந்த நோய்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்பதும் இதன் கீழே தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

7. ஆயுஷ்மான் திட்டத்துடன் தொடர்புடைய எந்த அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் உங்களுக்கான இலவச சிகிச்சையை  பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Mpox Clade 1b: குரங்கு அம்மையின் ஆபத்தான வகை இந்தியாவில்... துரித கதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஆயுஷ்மான் கார்டு பெற விண்ணப்பிக்கும் முறை (How To Apply For Ayshman Card)

நீங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு தகுதியுடையவராக இருந்ந்தால், தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, உங்கள் அருகில் உள்ள ஜன் சேவா கேந்திராவிற்கு சென்று ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ABHA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச சுகாதார பாதுகாப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News