Anti-Ageing Tips: முதுமை என்பது எவராலும் தவிர்க்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் அதனை நிச்சயம் ஒத்திப் போட முடியும்.  இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், 40 மற்றும் 50 வதுகளிலேயே முதுமையின் அறிகுறிகள் பெரும்பாலானோரின் முகத்திலும் சருமத்திலும் காணலாம். சருமத்தில் சுருக்கங்கள், தலைமுடி நரைத்தல், வழுக்கை ஏற்படுதல், பார்வைக் குறைபாடு என பல அறிகுறிகள் சீக்கிரமே தோன்ற ஆரம்பித்து விடுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் காரணமாக இளம் வயதிலேயே முதுமையின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விடுகின்றன. ஆண் -  பெண் இருபாலினருக்குமே, 40 வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகள் தளர்ந்து போக ஆரம்பிக்கின்றன. முதுமையின் தாக்கம் மெதுவாகத்  தெரிய ஆரம்பிக்கும். அதோடு, இதய நோய், நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த சோகை போன்றவை தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகின்றன. எனவே,  இந்த காலகட்டத்தில் தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் 40 வயதிற்குப் பிறகு பெண்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


அதிக சர்க்கரை சேர்த்த இனிப்பு வகைகள்


அளவுக்கு அதிகமாக இனிப்புகளை உட்கொள்வது எந்த வயதிலும் நல்லதல்ல. அதிலும் 40 வயதிற்குப் பிறகு, முடிந்தவரை இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரை உட்கொள்வதால், முகத்தில் பருக்கள், சுருக்கங்கள், புள்ளிகள் போன்றவை தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. மேலும், வளர்சிதை மாற்றம் படிப்படியாக மந்தமாகத் தொடங்குகிறது. இதன் காரணமாக உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆபத்து முன்பை விட பல மடங்கு அதிகரிக்கிறது. 


பொரித்த உணவுகள்


40 வயதிற்குப் பிறகு, பெண்கள் பொரித்த உணவை உட்கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு காணப்படுகிறது, இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இது சருமத்திற்கு நல்லதல்ல. இந்த வயதில், உங்கள் உணவில் குறைந்த எண்ணெய் கொண்ட ஆரோக்கியமான வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே சேர்த்துக் கொள்ளுங்கள். 


காஃபின் அதிகம் உள்ள உணவுகள்


காஃபின் அதிகப்படியான நுகர்வு  காரணமாக இளம் வயதிலேயே உங்கள் தோலில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் காணப்படும். மேலும், இது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதன் காரணமாக மனநலம் தொடர்பான பிரச்சனைகளான மனச்சோர்வு, பதட்டம், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் ஆபத்து வயது அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது. எனவே, 40 வயதிற்குப் பிறகு, பெண்கள் அதிகப்படியான காஃபின் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். 


மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வாழ வைக்கும் வாழைக்காயை அடிக்கடி சேர்த்துகோங்க


அளவிற்கு அதிக உப்பு 


பொதுவாஅக்வே, எந்த வயதிலும் உப்பு உட்கொள்வதைக் குறைக்க வேண்டும் என்றாலும், குறிப்பாக4 0 வயதிற்குப் பிறகு, பெண்கள் உப்பு உட்கொள்வதை முடிந்தவரை குறைக்க வேண்டும். 40 வயதிற்குப் பிறகு அதிக உப்பை உட்கொள்ளும் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனையும் வரலாம்.  அதோடு, உணவில் அதிக அளவு உப்பு இருந்தால் இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படும். இது தவிர, இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. 


சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள்


 40 வயதிற்குப் பிறகு, பெண்களின் வளர்சிதை மாற்றம்  மந்தமாகிறது. எனவே, பெண்கள் வெள்ளை ரொட்டி, பாஸ்தா, வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். இவற்றை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடல் பருமன அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிகும். இதன் காரணமாக மேலும் பல நோய்கள் வரலாம். இது தவிர, அவற்றின் எதிர்மறையான தாக்கம் சருமத்திலும் தெளிவாக காணப்படும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? காலையில் இந்த விஷயங்களை மட்டும் பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ