நீங்க இனி மீன் முட்களை கீழே தூக்கி போடாதிங்க பாஸ். மீனின் எலும்பு மனிதனின் எலும்புக்களுக்கு முழுமையான கல்சியம் சத்தை தருகிறதாம்....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீன் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு மீன் வகை உணவுகளுக்கு பலர் அடிமையாக இருப்பார்கள். நாம் அனைவரும் பொதுவாக மீன் உண்ணும்போது மீனின் சதையை மட்டும் உண்டுவிட்டு அதன் முள்ளை தூக்கி போடுவது வழக்கம். ஆனால் இனி, அப்படி பண்ணாதிங்க கடிக்க மிருதுவாக இருக்கும் மீன் முல்லை நீங்க சாப்பிடுங்க பாஸ். ஏன் தெரியுமா?. மீன் முல்லை சாப்பிட்டால் சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறுமாம். 
 
மனிதனின் உடல் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தானாகவே எலும்புகளில் உள்ள சத்து குறைய துவங்கும். குறிப்பாக பெண்களுக்கு 30 வயதை கடந்ததும் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்து கொள்வது அவசியம்.


கால்சியம் சத்துகிடைக்க பலரும் கூறுவது தினமும் பால் குடிக்க சொல்வது வழக்கம். ஆனால், பாலுடன் ஒப்பிடுகையில் எலும்புகளில் தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எனவே, மீன் முள்ளில் அதிகம் கால்சியம் இருக்கிறது. அதிலும் சால்மன் மற்றும் சார்டின் வகை மீன்களில் கால்சியம் சத்து அதிகமாகவே உள்ளது.


50 கிராம் சார்டின் உண்பதால் 340 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது. 85 கிராம் சால்மன் மீன் உண்பதால் 241 மில்லி கிராம் கால்சியம் சத்து கிடைக்கிறது. கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் வலிமையாக்குவதற்கு தேவைப்படுகின்றன.


தசைகள் விரியும் திறன், இரத்தம் உரைதல், நரம்புகளுக்கு செய்திகளை கடத்துதல் போன்றவற்றிக்கு கால்சியம் மிக முக்கியம். மேலும், நமது உடலில் இருக்கும் நகம், முடி, சிறுநீர், மலம், வியர்வை போன்றவற்றால் தினமும் கால்சியம் சத்து வெளியேறி கொண்டே இருக்கிறது.


ஆகவே அதிக அளவு கால்சியத்தை உட்கொள்ளும் போது உடலின் இயக்கம் சீராக இருக்கும். மீன் பிரியராக இருந்தாலும், சாதாரணமாக மீன் உண்பவராக இருந்தாலும் குத்தும் தன்மை இல்லாத, எண்ணையில் பொரித்த மீன் முட்களை உண்பது நல்லது.