இனிப்புக்காக அதிகம் உலர் திராட்சை சாப்பிட்டால் இந்த ஆபத்து உங்களுக்கு தான்
இனிப்பாக இருக்கிறது என்பதற்காக உலர் திராட்சையை அதிகம் சாப்பிட்டால் நீங்கள் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
திராட்சை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கோடைகாலத்தை விட குளிர்காலத்தில் திராட்சையை உட்கொள்வதால் இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு, எலும்புகளையும் பலப்படுத்துகிறது. திராட்சையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது.
இருப்பினும், திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், அவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். ஏனென்றால், திராட்சையை அதிகமாக உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உணவியல் நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். கலோரிகளை குறைக்க முயற்சிப்பவர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Fatty Liver: உங்கள் கல்லீரலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதா? அறிகுறிகள் இவைதான்
செரிமானத்தில் பாதகமான விளைவுகள்
திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாக சாப்பிடும்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமாக உட்கொள்வதால் நீரிழப்பு, அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
தோல் ஒவ்வாமை
திராட்சையை சாப்பிட்ட பிறகும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். சிலருக்கு முதன்முறையாக திராட்சையை சாப்பிட்ட பிறகு முகப்பரு வந்து, சருமத்தில் வெடிப்பு ஏற்படும். நீங்களும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், திராட்சையை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
எடை அதிகரிப்பு
திராட்சை பழத்தில் கலோரிகள் அதிகம். அவ்வாறான நிலையில், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அல்லது டயட்டில் இருந்தால், நீங்கள் அதை சீரான அளவில் உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் முயற்சிக்கு பாதகமாக அமையும்.
மேலும் படிக்க | முடி வளர மற்றும் அழகான சருமம் பெற நாவல் பழத்தை பயன்படுத்தவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR