Fatty Liver: கல்லீரல் கொழுப்பை கரைக்கும் சில ‘சூப்பர்’ உணவுகள்!
Liver Health: கொழுப்பு கல்லீரலுக்கு, அதிகப்படியான மது அருந்துவது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது ஆகியவை ஆகும்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் நமது கல்லீரலில் கொழுப்பு படிகிறது. இது ஒரு வகையான எச்சரிக்கை மணி. ஏனெனில் இது அதிகரிக்கும் போது, பல கடுமையான நோய்கள் சூழ்ந்துவிடும் அல்லது உட உறுப்புகள் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்ற அபாயம் அதிகரிக்கிறது. உங்கள் கல்லீரலில் ஏற்படும் இந்த வீக்கத்தால் வயிற்று வலி பிரச்சனை ஏற்படுகிறது. கொழுப்பு கல்லீரலுக்கு, அதிகப்படியான மது அருந்துவது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது ஆகியவை ஆகும். கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. சில குறிப்பிட்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொளவது கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்கும்.
கொழுப்பு கல்லீரல் இருந்தால் ‘இவற்றை’ உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
ஆப்பிள் வினிகர்
கொழுப்பு கல்லீரல் சிகிச்சைக்கு ஆப்பிள் வினிகர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை எரிப்பதோடு உங்கள் எடையையும் குறைக்க உதவுகிறது. இது கல்லீரல் வீக்கம் மற்றும் வயிற்று வலியையும் குறைக்கிறது. இதற்கு தினமும் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை உட்கொள்ளுங்கள்.
கிரீன் டீயும் நன்மை பயக்கும்
க்ரீன் டீயில் கேடசின் அதிகம் உள்ளது. இது ஆல்கஹால் அல்லாத கல்லீரலில் சேரும் பிற கொழுப்பைக் குறைக்கிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதற்கு தினமும் மூன்று முதல் நான்கு கப் கிரீன் டீ குடிக்கவும்.
மஞ்சளும் நிவாரணம் தரும்
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இதை சாப்பிடுவதால் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்பு அழிந்து விடும். மஞ்சள் உங்கள் உடலின் கொழுப்பை ஜீரணிக்கும் திறனை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரலில் சேராமல் தடுக்கிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்க, பாலில் கால் ஸ்பூன் மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | ஆனந்த் அம்பானிபோல் உடல் எடை ஏறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பப்பாளி
பப்பாளி மற்றும் அதன் விதைகளை உட்கொள்வது கொழுப்பு கல்லீரலில் நன்மை பயக்கும். இது கல்லீரல் கொழுப்பாக மாறாமல் தடுக்கிறது. பப்பாளியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவது நன்மை தரும். இதனுடன் அரைத்த பப்பாளி விதைகளை தண்ணீரில் கரைத்து குடிப்பதும் கொழுப்பு கல்லீரலில் பலன் தரும்.
அம்லா சிகிச்சை
ஆம்லாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்வதால், கல்லீரலில் தேங்கியுள்ள கொழுப்பு அழிக்கப்படுகிறது. இதனுடன், கல்லீரலில் இருந்து நச்சுப் பொருட்களையும் நீக்குகிறது.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | குளிர்காலத்தில் தினமும் பேரிட்சை பழம் அவசியம் சாப்பிடுங்கள்..! ஆயுசுக்கு உத்தரவாதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ