Health News:கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாக்கும் உணவுகள்
கோவிட் தொற்று நோயாளிகளிடம், வைட்டமின் D பற்றாக்குறை குறைபாடு காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர தன்மையானது நுரையீரலில் ஏற்படும் நிமோனியா பாதிப்பு அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
கோவிட்-19 என்ற நோய், 2019ஆம் ஆண்டில் இருந்து உலகில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. தொடக்கத்தில் பயங்கரமாக இருந்த கொரோனா வைரஸ் உலகையே முடக்கிப்போட்டது. அதைவிட வீரியம் மிக்கதாக 2021ஆம் ஆண்டில் வேகம் காட்டிய கொடிய வைரஸ் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. இப்போது இரண்டாம் அலையின் உச்சம் சற்றே தணிந்துவருகிறது.
இரண்டாம் அலை முடிவுக்கு வருவதற்குள், கடல் அலை போல், மூன்றாம் அலை வரும் என்ற எச்சரிக்கை விடுக்கும் அச்சம் அனைவருக்கும் பீதியை எழுப்பியிருக்கிறது.
கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலை வருமா வராதா என்ற விவாதங்களுக்கு மத்தியில், வருமுன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கையே சிறந்தது.
Also Read | Sea Foods: இளமையான தோற்றம் வேண்டுமா? இந்த உணவை சாப்பிடுங்க!
சமூக இடைவெளி, தேவையில்லாமல் வெளியே செல்லாமல் இருப்பது போன்ற புறக்காரணிகளை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். அத்துடன், உடலுக்கு வலுவூட்டும் உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், கொரோனாவின் மூன்றாம் அலை என்ன, எத்தனை அலைகள் வந்தாலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
வைட்டமின் D பற்றாக்குறை கோவிட் தொற்று நோயாளிகளிடம் காணப்பட்டது, நோயெதிர்ப்புத் தன்மையை குறைக்க இந்த குறைபாடு முக்கிய காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர தன்மையானது நுரையீரலில் ஏற்படும் நிமோனியா பாதிப்பு அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
வைட்டமின் டி குறைபாட்டால், நிமோனியா உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.வைட்டமின் D நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தும் என்பதால், இந்த உயிர்ச்சத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொரோனா பாதிப்பு ஏற்படாது.
Also Read | கோவிட்டால் முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
அதிலும் பெரும்பாலான இந்தியர்களிடையே வைட்டமின் D பற்றாக்குறை காணப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு, இந்த உயிர்ச்சத்து கொண்ட உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், வைட்டமின் இன்றியமையாததாக இருக்கிறது. கரையக்கூடிய இந்த உயிர்சத்து, அழற்சி, அழற்சிக்கு எதிரான திறன் மற்றும் நோய் எதிர்ப்புத்திறனை சீராக்கும் பண்பைக் கொண்டுள்ளது.
அதோடு, எலும்புகளையும், சதைகளையும் வலுவாக்குகிற கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை நமது உடலில் ஒழுங்குமுறைபடுத்தவும் வைட்டமின் D உதவுகிறது.
Also Read | காய் & பழங்களை ஏன் ஃப்ரிட்ஜில் ஒன்றாக வைக்கக்கூடாது தெரியுமா?
இத்தனை சிறப்புப் பண்புகளைக் கொண்ட வைட்டமின் டி (Vitamin D) பற்றி உங்களுக்குத் தெரியுமா? விட்டமின் D என்பது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். வைட்டமின் டி2, வைட்டமின் டி3 ஆகியவை உடலின் செயல்பாட்டுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களை கொண்டது வைட்டமின் D. சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து கிடைக்கும் விட்டமின் D, இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் கிடைக்கிறது.
கொழுப்பு மீன்கள், முட்டைகள், சிவப்பு இறைச்சி வகை ஆகிய உணவுவகைகளில் அதிக அளவு விட்டமின் D உள்ளது. சூரிய ஒளியில் வளரும் காளான் வகைககளில் இந்த உயிர்ச்சத்து மிகுதியாக உள்ளது. இதுபோன்ற உணவுகளை சேர்த்துக் கொண்டால், உடல் வலு பெறும், கொரோனாவின் மூன்றாம் அலையும் உங்களை அண்டாது.
Also Read | நரைமுடியை குறைத்து, தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR