யூரிக் அமில பிரச்சனையா? இந்த காய்கறிகளை தவிர்த்தால் பிரச்சனை குறையும்...
Avoidable Foods For High Uric Acid Problem: அதிக யூரிக் அமிலம் இருந்தால் எந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது மட்டுமல்ல, அதை சரியாக கடைபிடிக்கவும் வேண்டும்
உடலில் சேரும் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள், உண்ணும் உணவு முதல் காய்கறிகள் பழங்கள் என தங்கள் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால், நமது உடல் இயக்கத்தின்போது உருவாகும் கழிவுப்பொருள் தான் யூரிக் அமிலம். நமது உடலின் செரிமான உறுப்புகள் திறம்பட இயங்கி உணவை செரிமானம் செய்யும்போது உருவாகும் அமிலம் தான் யூரிக் அமிலம்.
உண்ணும் உணவுகளே உடலின் இயக்கத்திற்கு ஆதாரம் என்பதும், எந்த உணவுப்பொருள் என்னவிதமான தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்துக் கொண்டால் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். அந்த வகையில், ஏற்கனவே யூரிக் அமில பிரச்சனை இருப்பவர்கள் சில காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், அவை உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும்.
அதிக யூரிக் அமிலம் இருந்தால் எந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது மட்டுமல்ல, அதை சரியாக கடைபிடிக்கவும் வேண்டும். ஏனென்றால், யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, கால்விரல்களில் வீக்கம் மற்றும் கட்டிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த வீக்கம் அதிகப்படியான பியூரின்களால் ஏற்படும் பிரச்சனை ஆகும். யூரிக் அமில நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் காய்கறிகள் எவை என்பதை ஆயுர்வேதம் அடையாளம் கண்டுள்ளது.
இந்த காய்கறிகளை சாப்பிடுவதால், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு வேகமாக அதிகரித்து, பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதுவே, யூரிக் அமிலம் குறைவாக இருப்பவர்கள் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், பொதுவாக யூரிக் அமிலம் சுரப்பது குறைவாக இருப்பது மிகவும் அரிது.
உடலில் யூரிக் அமிலம் அளவு அதிகமாக உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத காய்கறிகளின் பட்டியல்
காளான்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி என்றாலும், காளான்கள், கீல்வாதம் மற்றும் அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவாகும். காளான்களை உட்கொள்வதால் உடலில் பியூரின் அளவு அதிகரிக்கிறது. யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க பியூரின்களே காரணம் என்பதால் காளான் உண்பதை தவிர்க்கவும்.
கீரை
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் கீரைகளை தவிர்க்கவும். அதிக அளவு புரதம் இருக்கும் கீரைகள், கீல்வாதத்தை அதிகரிக்கும்.
ப்ரோக்கோலி
ஆரோக்கியமானதாக இருந்தாலும், ப்ரோக்கோலியை உட்கொள்வது யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ப்ரோக்கோலி சாப்பிடுவது பியூரின்களை ஜீரணிப்பதில் உடலுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, வலி மற்றும் வீக்கம் அதிகரிக்கத் தொடங்குகிறது.
பச்சை பட்டாணி
பட்டாணி உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும் என்றாலும், அவை ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். பட்டாணி சாப்பிடுவதால் உடலில் பியூரின் அளவு அதிகரிக்கிறது. இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும்.
காலிஃபிளவர்
உடலில் பியூரின் அளவை அதிகரிக்கும் காய்கறிகளில் காலிஃபிளவரும் ஒன்றாகும். பியூரின்கள் அதிகமானால் யூரிக் அமில சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், உடலில் வலி மற்றும் வீக்கமும் கணிசமாக அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யூரிக் ஆசிட் பிரச்சனையா? இந்த காய்கறிகள் இருக்கும்போது கவலை எதுக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ