ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் இரண்டு அத்தியாவசிய கூறுகள் உள்ளன. ஈகோசாபென்டெனோயிக் அமிலம் (eicosapentaenoic acid (EPA)) மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (ocosahexaenoic acid (DHA)) ஆகிய இந்த சக்திவாய்ந்த பொருட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு மேலாண்மையில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை வழக்கமான உணவில் மிதமான அளவில் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.  


இதய ஆரோக்கியத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பங்கு
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை அழகாக சீரமைக்கிறது. ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்தல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைத்தல் என இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. ஏனென்றால், ட்ரைகிளிசரைடுகள், இரத்தத்தில் உள்ள ஒரு வகை கொழுப்பாகும், அவற்றின் அளவு அதிகரிக்கும் போது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது.


மேலும் படிக்க | கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்! சகல ரோக நிவாரணியாகவும் மாறும் இயற்கைக்கொடை


ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கும் காரணியாக செயல்படுவதால் இருதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றன மற்றும் இரத்த நாளங்களின் தளர்வை ஊக்குவிப்பதன் மூலம் இதயத்தின் அழுத்தத்தை குறைக்கின்றன.


கூடுதலாக, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, இது இதய நோய்க்கு வழிவகுக்கும் அழற்சிகளைகுறைக்கிறது. இந்த அழற்சி எதிர்ப்பு விளைவு இரத்த நாளங்களின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது, மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


நீரிழிவு நிர்வாகத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நன்மைகள்


ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானது. நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணியான இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் வேலையை ஒமேகா-3 அமிலம் செய்கிறது. வகை 2 நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் குறைவால் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்துகின்றன.


மேலும் படிக்க | எலும்புகளை பலவீனப்படுத்தும் கீரைகள்! கீரையுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்


ஒமேகா -3 வளமாக உள்ள உணவுகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பலன்களை போதுமான அளவு பெறுவதற்கு சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் உதவுகின்றன. அதேபோல சைவ உணவுக்காரர்களுக்கு ஆளிவிதை மற்றும் அக்ரூட் பருப்புகள் ஒமேகா அமிலம் நிறைந்த உணவுகளாக இருக்கின்றன. ஒமேகா-3 சப்ளிமெண்ட்ஸ் மூலமும்கொழுப்பு அமிலங்களை உங்கள் உணவில் சேர்க்கலாம்.
 
ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஐ சமநிலைப்படுத்துதல்
கொழுப்பு அமில ஒற்றுமைக்கு சமநிலையை அடைவது முக்கியம். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அவற்றின் எண்ணற்ற நன்மைகளுக்காக கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களுடன் இணக்கமான சமநிலையை பராமரிப்பது முக்கியம். பலவிதமான சமையல் எண்ணெய்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒமேகா-6கள் ஏராளமாக உள்ளன, இந்த  இரண்டு அமிலங்களின் சமநிலையை பராமரிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


சரிவிகித உணவில் ஒமேகா அமிலங்கள்
நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் உணவில் மாற்றங்களை செய்வது அல்லது ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸைக் கருத்தில் கொள்வது ஆகியவை அவசியம். ஒருவரின், இதய ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு மேலாண்மையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.


மேலும் படிக்க | நவீன கும்பகர்ணன்! தூக்கக் கோளாறு நோயால் தொடர்ந்து 8 நாட்கள் தூங்கும் மனிதன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ