கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்! சகல ரோக நிவாரணியாகவும் மாறும் இயற்கைக்கொடை

Hair Growth Foods: வலுவான மற்றும் பளபளப்பான முடி அழகை பெறுவதற்கு, விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். நிச்சயமாக, அவை உதவியாக இருக்கும், ஆனால் நீண்ட கால அடிப்படையில், உங்கள் தலைமுடி வறண்டு பொலிவிழந்து அல்லது முடி உதிரும்.

இயற்கையாகவே வேர்களில் இருந்து முடியை வளர்ப்பதும், முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதும் அவசியம். கூந்தல் ஆரோக்கியத்தை பராமரித்து, பட்டு போன்ற பளபளப்பான மென்மையான முடியைக் கொடுக்கும் உணவுகளின் பட்டியல் இது  

1 /9

தலைமுடியின் அழகை மேம்படுத்துவதற்காக, முடிக்கு பளபளப்பை ஏற்படுத்தும் வெளிப்புற ஊட்டச்சத்தில் நாம் கவனம் செலுத்துகிறோம், ஆனால் நாம் சாப்பிடுவதில் கவனம் செலுத்துவது முக்கியமானது. 

2 /9

கூந்தலின் ஆரோக்கியம் குறைந்தால், உங்கள் உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய ஐந்து சூப்பர்ஃபுட்கள் இவை

3 /9

முடி பிரச்சனைகள் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க, ஆரோக்கியமான உணவு அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

4 /9

பல்வேறு முடி பராமரிப்பு பொருட்களில் நெல்லிக்காய் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இந்த ஆயுர்வேத சூப்பர்ஃபுட் வைட்டமின் சி மற்றும் கொலாஜன் புரத உற்பத்திக்கு உதவுகிறது. இது முடி வளர்ச்சியைத் தூண்டி, உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காயின் சுவை சற்று புளிப்பாகவும், கசப்பாகவும் இருப்பதால், பலர் அதை சாப்பிடுவதில்லை.  ஜூஸ், ஊறுகாய், சட்னி என ஏதாவது ஒரு விதத்தில் நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவும்

5 /9

நம் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைக் கொடுக்கும்  பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை இரும்பின் சிறந்த மூலமாகும், இது நமது மயிர்க்கால்களை வலுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.  

6 /9

தலைமுடி பளபளப்பாக இருக்க போதுமான அளவு ஆரோக்கியமான கொழுப்புகள் தேவைப்படுகிறது. மேலும் கொட்டைகள் மற்றும் விதைகள் அவற்றை ஏராளமாக வழங்குகின்றன. அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை மற்றும் ஏராளமான பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டி முடி உதிர்வதைத் தடுக்கலாம். பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி பருப்புகள், ஆளிவிதைகள், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் அனைத்தும் முடிக்கான ஆரோக்கியமான உணவு அட்டவணையில் இருந்தால் பளபளப்பான பட்டுப் போன்ற கூந்தல் உங்களுக்கே...

7 /9

கூந்தலுக்கு ஆரோக்கியமான உணவு என்ற பட்டியலில் முழு தானியங்களுக்கும் முக்கிய இடம் உண்டும். முழு தானியங்களில் பயோட்டின் நிறைந்துள்ளது, இது அமினோ அமிலங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது, முடி வளர்ச்சியை ஊக்குவித்து கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

8 /9

கூந்தலுக்கான உங்கள் ஆரோக்கியமான உணவு அட்டவணையில் முட்டைகளுக்கு சிறப்பான இடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் முட்டைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும், இது முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். நமது தலைமுடியின் பெரும்பகுதி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. முட்டையுடன் செறிவூட்டப்பட்ட உணவு, உங்கள் தலைமுடியை உச்சந்தலையில் இருந்து முழுமையாக வளர்த்து, சேதமடையாமல் தடுக்கிறது. இது அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான தோற்றத்தையும் அளிக்கிறது

9 /9

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை