Omega-3 Fatty Acid Rich Foods: ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பலருக்கு தெரிவிதில்லை. ஆனால் இது நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஏனெனில் இது பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த சத்து குறைபாடு இருந்தால், எலும்பு பலவீனம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். புற்று நோய் வராமல் இருக்க இந்த ஊட்டசத்து அவசியம். ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் குறைபாட்டை நீக்கும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள், சைவ உணவு உண்பவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிக அளவில் கொடுக்கும் உணவுகள். பச்சை காய்கறிகள் அனைத்து வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பச்சை காய்கறிகள் மற்றும் பல வகையான கீரைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முட்டை
நம்மில் பலர் காலை உணவாக முட்டைகளை சாப்பிட விரும்புகிறோம். ஆனால், இது ஒரு சூப்பர்ஃபுட் என்றால் மிகையில்லை. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இதில் காணப்படுகின்றன. மேலும் இதை சாப்பிடுவதால் ஏராளமான புரதம் மற்றும் வைட்டமின் ஈ கிடைக்கும்.
மேலும் படிக்க | Heath Alert: டீயுடன் ‘சில’உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு!
சோயாபீன்
சைவ உணவு உண்பவர்களுக்கு, சோயாபீன் புரத சத்தை பெறுவதற்கான சிறந்த வழி. ஆனால் இது உடலுக்கு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களையும் வழங்குகிறது என்பது மிக சிலருக்குத் தான் தெரியும். நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை இதில் காணப்படுகின்றன.
மீன்
மீன் பலரின் விருப்ப உணவாக உள்ளது, ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதம், மெக்னீசியம், வைட்டமின் B5 மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதற்காக நீங்கள் சால்மன் மற்றும் டுனா மீன் சாப்பிடலாம்.
வாதுமை பருப்பு
உலர் பழங்கள் என்று வரும்போதெல்லாம், அக்ரூட் எனப்படும் வாதுமை பருப்புகள் முதல் தேர்வாக உள்ளன. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | முட்டையை பிரிட்ஜில் வைக்கும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ