கொரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் சுகாதார கவலைகள் பன்மடங்கு அதிகரித்து விட்டன. கொரோனா வைரஸ் பரவுதலையும் அதன் தாக்கத்தையும் தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக கொரோனாவுக்கென தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது கோவிட் நோயிலிருந்து பாதுகாக்க பல்வேறு தடுப்பு மருந்துகள், மக்களுக்கு தடுப்பூசியாக வழங்கப்படுகிறது.


சில தடுப்பூசிகள் ஒற்றை டோஸே போதும் என்றால், சில தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.  ஜான்சன் & ஜான்சன் மற்றும் பயோலாஜிக்கல் இ லிமிடெட்  இணைந்து ஒற்றை டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை தயாரித்துள்ளது. கோவேக்சின், கோவிஷீல்டு உட்பட பல்வேறு தடுப்பூசிகள் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்டால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.


Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…


ஆனால், சிலருக்கு மூன்று டோஸ்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாருக்கெல்லாம் மூன்று டோஸ் தடுப்பூசி போட வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்.


நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடவேண்டுமாம்.  நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்களுக்கு கோவிட் -19 நோயில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதற்காக மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடவேண்டும். 


இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகாரம் அளித்துள்ளது. மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸின் அவசரகால பயன்பாட்டிற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration) அனுமதி அளித்துள்ளது.


Also Read | 3வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட நோயாளி 5 சிறுநீரகங்களுடன் நலம்!!!!!


"COVID-19 தொற்றுநோயின் அடுத்த அலையை அமெரிக்கா எதிர்கொள்கிறது. இந்த அலையில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுகிறது.


தற்போது வரை கிடைத்துள்ள தரவுகளை முழுமையாக ஆய்வு செய்தபிறகு, நோயெதிர்ப்பு குறைப்பாடு உள்ளவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மாடர்னா தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸை கொடுக்கலாம் என்று எஃப்.டி.ஏ தீர்மானித்துள்ளது" என FDA கமிஷனர் ஜேனட் வூட்காக் வியாழக்கிழமை (ஆகஸ்டு 12, 2021) தெரிவித்தார்.


"கோவிட் -19 இலிருந்து கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் சில நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இரண்டு டோஸ் மட்டுமே ஒருவருக்கு போட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மருத்துவர்கள் செயல்பட்டுவந்தனர். எனவே இப்போது குறிப்பிட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போடுவதற்கான அனுமதியை இன்று அளிக்கிறோம்” என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது. 


Also Read | ICMR: கோவிட் நோய் ஏற்படாமல் தடுக்க காசநோய் தடுப்பூசி பயனளிக்கலாம்


மேலும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சாதாரண மக்களுக்கு அந்த தடுப்பூசிகளே போதுமான அளவு பாதுகாப்பை அளிக்கும். எனவே நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களைத் தவிர பிறருக்கு கோவிட் -19 தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவையில்லை" என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தற்காலிகத் தலைவர் ஜேனட் வூட்காக் (FDA Commissioner Janet Woodcock) கூறினார்.


யாருக்கு கொரோனா மூன்றாவது தடுப்பூசி தேவை? எப்போது அதை போட வேண்டும்? எத்தனை நாள் இடைவெளியில் போட வேண்டும்? என்பது போன்ற விஷயங்களை, நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களே முடிவு செய்துக் கொள்வார்கள்.


Also Read | Covaxin: WHO அங்கீகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஆலோசனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR