வெப்ப காலத்திலிருந்து மழை காலத்திற்கு வானிலை மாறும்போது தயிர் உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயிரில், வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும், கொழுப்பும் , கால்சியமும் உள்ளது. தயிரில்  வைட்டமின் `பி' உள்ளன. தயிர் புளிப்பு சுவை கொண்டது.    


பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில்  91 சதவீதம் ஜீரணமாகி விடும் சக்தி உள்ளது.


தயிரின் நன்மைகள் : 


# வயிற்றுப்போக்கு ஏற்படும்போது தயிரை மோர்காக உட்கொள்ளுதால் நல்லது.


# பகல், மதியம் இருவேளை தயிர் எடுத்துக்கெள்ளாம்.  


# மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்பட்டால் தயிர் உடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக்கொள்வது நல்லது. 


# தயிரில் கொழுப்புச் சத்து உடல் பருமன் பெற உதவுகிறது 
 
தயிரின் தீமைகள் : 


இரவில் தயிரைப் பருகக் கூடாது. 


மார்பில் சளியை உண்டாக்கும். 


குளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும்.


மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும்.


தயிரின் அழகு  குறிப்புகள் : 


# தலையில் தயிரை நன்றாக தேய்த்தால் குளித்தால் உஷ்சனம் குறையும்.


# தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது


# வெயிலினால் அலர்ஜி உண்டாகும் பொது தேன், தயிர் கலந்து உடலில் தடவி குளித்தால் போதும் அலர்ஜி நீங்கிவிடும்