Pulse Oximeter வீட்டில் இருக்கா? கொரோனா காலத்தில் இதன் அவசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்
நோயாளியை எப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பதைக் கண்டறிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளியின் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம்.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நகரங்களில், மருத்துவமனைகள் முதல் மருத்துவ வசதி மையங்கள் வரை செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. ஏராளமான மக்களுக்கு படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், லேசான அறிகுறிகளுடைய நோயாளிகள் வீட்டிலேயே இருக்கவும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையை மேற்கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்துகிறது.
கொரோனா நோயாளியை எப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்?
நோயாளியை எப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பதைக் கண்டறிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளியின் ஆக்ஸிஜன் அளவைக் (Oxygen Level) கண்காணிப்பது மிகவும் முக்கியம். ஆகையால், ஆக்ஸிஜன் அளவை அளவிட ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டரை (Pulse oximeter) வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும்.
Pulse oximeter என்றால் என்ன?
Pulse oximeter டிஜிட்டல் டிஸ்பிளே கொண்ட ஒரு சிறிய கிளிப் போன்ற இயந்திரமாகும். இது விரலில் பொருத்தப்பட்டு ரீடிங் எடுக்கப்படும். அதன் உதவியுடன், இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு அளவு (Oxygen saturation level in blood) எவ்வளவு இருக்கிறது என்பதை அளவிட முடியும்.
Oxygen saturation அதாவது ஆக்சிஜன் செறிவு என்றால் என்ன?
சிவப்பு ரத்த அணுக்கள் (RCB) ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு ஆக்சிஜன் செறிவு எனப்படும். இரத்தத்தில் ஆக்ஸிஜன் பாய்வதால்தான் அனைத்து உறுப்புகளும் சரியாக வேலை செய்கின்றன.
Pulse oximeter என்ன செய்கிறது?
உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட இந்த கருவி கண்டறிந்துவிடும். இதைப் பயன்படுத்தும்போது விரலில் எந்த வித வலியும் இருக்காது.
Pulse oximeter எவ்வாறு செயல்படுகிறது?
Pulse oximeter தோலில் ஒரு வகையான ஒளியை செலுத்துகிறது. இதன் மூலம் இரத்த அணுக்களின் இயக்கத்தையும் அவற்றின் நிறத்தையும் கண்டறிகிறது. ஒரு ஆரோக்கியமான (Healthy) நபரின் உடலில் 96 சதவீத ஆக்ஸிஜன் இருக்க வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 94 சதவீதத்தை விட கீழே சென்றால், அது ஆபத்தின் அடையாளமாக இருக்கலாம்.
கொரோனா காலத்தில் Pulse oximeter மிகவும் பயனளிக்கும்
வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சையில் இருக்கும் கொரோனா (Coronavirus) நோயாளிகள் Pulse oximeter-ன் உதவியுடன் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3-4 முறை ஆக்சிஜன் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 90 க்குக் கீழே இருந்தால், நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
(குறிப்பு: எந்தவொரு தீர்வையும் எடுப்பதற்கு முன்பு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும். இந்த தகவலுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.)
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR