மின்னல் வேகத்தில் எடை குறைக்கும் பச்சை மிளகாய்..எப்படி சாப்பிட வேண்டும்?
Reduce Weight From Green Chillies: மிளகாயின் நன்மைகள் பற்றி மக்களுக்கு தெரியாது. ஆனால் பச்சை மிளகாயை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையைக் குறைக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், எடை இழப்புக்கு இது எளிதான தீர்வு. இப்போது இதை எப்படி உணவில் சேர்ப்பது என்று பார்ப்போம்...
உடல் எடையை குறைக்கும் பச்சை மிளகாய்: உடல் எடையை குறைக்க பல்வேறு விதமான உத்திகளை நாம் கடைபிடித்திருப்போம். வெவ்வேறு உணவுகளை ஒன்று சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக உடல் எடை குறையும் என்ற பரிந்துரைகள் நமக்கு சொல்லப்பட்டிருக்கும். மூலிகைகள், வாசனை பொருட்கள், வெதுவெதுப்பான தண்ணீர் போன்ற பல்வேறு உணவு முறைகளை கையாள்வதன் மூலமாக உடல் எடை குறையும் என்றும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும் என்றும் பலர் கூற கேட்டிருப்போம். ஆனால், உடல் எடையை குறைக்க பச்சை மிளகாய் உதவியாக இருக்கும் என்ற செய்தியை இதுவரை கேள்விபட்டதுண்டா? ஆம், எடை இழப்புக்கு இது ஒரு எளிதான தீர்வாகும். ஏனெனில் பச்சை மிளகாயில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது மிகச் சிலருக்குத் தெரியும். பச்சை மிளகாயில் இது போன்ற பல பண்புகள் உள்ளன, இவற்றை உட்கொள்வது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, இரும்பு, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற கூறுகள் பச்சை மிளகாயில் உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க பச்சை மிளகாயை உணவில் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது காண்போம்.
உடல் எடையை குறைக்க உதவுமா பச்சை மிளகாய்..?
பச்சை மிளகாய் எடை குறைக்க உதவுகிறது (Green Chillies For Weight Loss)
பச்சை மிளகாயுடன் தொடர்புடைய சில சான்றுகள் என்ன கூறுகிறது என்றால், பச்சை மிளகாயை நாம் சாப்பிடுவது எடை குறைக்க உதவும் என்று கூறுகின்றன. பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் உடலின் கலோரிகள் குறைவதுடன் எடையும் குறைகிறது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!
பச்சை மிளகாயை உண்பதால் தீமைகளும் ஏற்படலாம்
பச்சை மிளகாயை உட்கொண்டால், அதை அதிகமாக சாப்பிடவே கூடாது. ஏனெனில் பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் செரிமானம் பலவீனமாக இருந்தால், பச்சை மிளகாயை அதிக அளவில் சாப்பிட வேண்டாம். பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
பச்சை மிளகாயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits Of Eating Green Chillies)
1. செரிமானம்- பச்சை மிளகாயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது பெருங்குடலை சுத்தப்படுத்துகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.
2. சருமம் பளபளக்கும்- பச்சை மிளகாயில் உள்ள வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் ஈ இயற்கை எண்ணெயை உருவாக்குகிறது, இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பருக்கள், சொறி, புள்ளிகள், மற்றும் சுருக்கங்கள் இதன் உபயோகத்தால் குணமாகும்.
3. இதயநோய் பாதிப்பு குறையும் : மிளகாய், மிளகு போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு இதயம் சமப்ந்தப்பட்ட நோய்கள் அல்லது புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று அமெரிக்க இதய நல அராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வாரத்தில் 4 நாட்கள் பச்சை மிளகாயை எடுத்துக் கொண்டவர்களின் இறப்பு விகிதம் என்பது மிளகாய் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ