விண்ணை முட்டும் எலுமிச்சை விலை...விலை உயர்வுக்கு காரணம் என்ன?

நாடு முழுவதும் எலுமிச்சம் பழத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வே இந்த விலையேற்றத்திற்குக் காரணமென வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 13, 2022, 02:03 PM IST
  • விண்ணை முட்டும் எலுமிச்சை விலை
  • ஒரு பழம் ரூ.10 வரை விற்பனை
  • எரிபொருள் விலை உயர்வால் காய்கறிகள் விலை உயர்வு
விண்ணை முட்டும் எலுமிச்சை விலை...விலை உயர்வுக்கு காரணம் என்ன? title=

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தைத் தணிக்க மக்கள் அதிக அளவில் பழங்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்தும் குறைவாக உள்ளதால் நாடு முழுவதும் எலுமிச்சம்பழத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ. 350க்கு விற்பனையானது. முன்னெப்போதும் இல்லாத வகையில் விலை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குஜராத்தில் ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ.200-க்கு விற்பனையாகிறது. ஹைதராபாத்தில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதற்கு முன்பு ரூ.700-க்கு விற்பனையான ஒரு மூட்டை எலுமிச்சம்பழம் தற்போது ரூ.3,500-க்கு விற்பனையாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | மக்கள் வேதனை; 137 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இவ்வளவு விலை கொடுத்து எலுமிச்சம் பழத்தை வாங்க வாடிக்கையாளர்கள் தயங்குவதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த விலை உயர்வுக்கு எரிபொருள் விலையேற்றமே காரணமென வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 30 வருடங்களில் ஒரு கிலோ எலுமிச்சம் பழம் அதிகபட்சமாக ரூ.150-க்கு விற்பனையானதாகவும், ஆனால் இப்போது ரூ.300-க்கு விற்பனையாவதாகவும், டீசல் விலையேற்றத்தினால் ஒரு லாரி லோடுக்கு ரூ.24 ஆயிரம் ரூபாய் செலவாவதாகவும் மொத்த வியாபாரிகள் கூறியுள்ளனர்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறிய பழம், ரூ.10-க்கும், பெரிய பழம் ரூ.15-க்கும் விற்பனையாகிறது. பழத்தின் விலை உயர்ந்துள்ளதால் எலுமிச்சம் சாறின் விலையும் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் எலுமிச்சம்பழம் மட்டுமின்றி, பச்சை மிளகாய், பாகற்காய், பட்டாணி போன்ற காய்கறிகளின் விலையும் கடந்த 2 வாரங்களில்  கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பச்சை மிளகாயை இலவசமாக வழங்குவதை நிறுத்திவிட்டதாக பல விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் படிக்க | டீ, காபி குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்! விலை அதிரடி உயர்வு!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News