குழந்தை அறிவாளியாக - ஆரோக்கியமாக பிறக்க... கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியவை
Pregnancy Tips: கர்ப்ப காலத்தில், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, பெண்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, பெண்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நிறந்த உணவு அவர்களுக்குத் தேவை. இந்த காலகட்டத்தில், அதிகப்படியாக சாப்பிடுவக்தைத் தவிர்த்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில், பெண்கள் வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் திரவங்களை உட்கொள்வது முக்கியம். கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் ரிம்ஜிம் குமாரி கூறுவதை தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணிகள் கட்டாயம் டசாப்பிட வேண்டிய சில உணவுகள்
பால் பொருட்கள்
கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு கூடுதல் புரதம் மற்றும் கால்சியம் தேவைப்படுகிறது. எனவே, பால் மற்றும் தயிர் உங்கள் பட்டியலில் இருக்க வேண்டும், இதனால் அவர்கள் முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் (Health Tips) பெற முடியும்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
கர்ப்பிணிகள் தனது கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வைட்டமின் டி குழந்தையின் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும் குழந்தையின் நுண்ணறிவை அதிகரிக்கிறது. இதற்கு பால், தயிர், கேரட் போன்றவற்றை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஓவர் எடை உடனே குறைய இந்த காய்களை சாப்பிடுங்க: தொப்பை கொழுப்பும் காணாமல் போகும்!!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
மீன் உணவுகள்
அசைவ உணவுகளை விரும்புபவர்கள் என்றால், கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக மீன் உணவு சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அதில் நிறைய வைட்டமின் டி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் உள்ளது. இது மூளை வளர்ச்சி மற்றுல் எலும்புகள் பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்
முட்டை
கர்ப்ப காலத்தில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் முட்டை கர்ப்பிணிகளுக்கான சிறந்த ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது.
உலர் பழங்கள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் உலர் பழங்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உலர் பழங்களில் காணப்படுகின்றன. இதனுடன், உடலுக்கு நன்மை பயக்கும் இயற்கை சர்க்கரையும் உலர் பழங்களில் காணப்படுகிறது.
திரவ உணவுகள்
கர்ப்ப காலத்தில், தாய்க்கும், சேய்க்கும் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டியது அவசியம். எனவே சீரான இடைவெளியில் திரவ உணவுகள் உட்கொள்ளுங்கள். தண்ணீரைத் தவிர, அதிக நீர்சத்த்து கொண்ட பழங்களை உண்ணலாம். இளநீர் குடிப்பதும் நன்மை பயக்கும்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைந்த கலோரி கொண்ட சில சுவையான சிற்றுண்டிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ