என்றென்றும் மார்கண்டேயனாக இருக்க வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள். வயசானாலும் அழகு மாறாமால் இருக்க வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவார்கள். வயதாகும்போது நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். முதுமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் உணவில் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், நம்மால் நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும், இருக்க முடியும். முதுமை வருவதை தடுக்கும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலிவ் எண்ணெய்


ஆலிவ் எண்ணெயில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 சத்துக்கள் நிறைந்துள்ளன.அவை மூளை ஊக்கியாக செயல்படுகின்றன. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.


கிரீன் டீ 


கிரீன் டீ யில் முதுமையை தடுக்கும் தன்மை உள்ளது. இதில் வைட்டமின் ஏ, ஈ, பி5, கே, புரதம், இரும்பு, தாமிரம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளது. அதோடு காஃபின் உள்ளது. எனவே, கப் கிரீன் டீ சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது செல்கள் சேதத்தை தடுக்கிறது. எனவே நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம். எனினும் அளவிற்கு அதிகமாக கிரீன் டீயை எடுத்துக் கொள்ளக் கூடாது. 


டார்க் சாக்லேட் 


டார்க் சாக்லேட் முதுமையை தடுக்கும் உணவாகவும் செயல்படுகிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இது சருமத்திற்கும் ஆரோக்கியமானது. ஆனால் டார்க் சாக்லேட்டை அதிகம் சாப்பிட வேண்டாம்.


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!


பாதாம் மற்றும் வதுமை பருப்பு


பாதாம் மற்றும் வாதுமை பருப்புகள் வைட்டமின் ஈ சத்தின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். இது தோல் திசுக்களை புதுப்பிப்பதோடு, புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவற்றை உட்கொள்வதால் சருமம் பொலிவடையும்.


மீன் உணவுகள் 


சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் டுனாவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியமான சருமத்திற்கு நன்மை பயக்கும். இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்திற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றன. 


கிவி பழம்


கிவி பழம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடலில் ஆன்டிபாடிகள் மற்றும் இரத்த அணுக்களை அதிகரிக்கிறது. கூடுதலாக, அவை உடலின் என்சைம் திசு மற்றும் செல் சவ்வுகள் அதிகரிக்க உதவுகின்றன.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ