உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி சாதனை படைத்த இந்தியா!!!
பிரேசிலையும் அமெரிக்காவையும் பின்தள்ளி உலகில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை மீட்டெடுத்துள்ளது இந்தியா...
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலையும் பின்தள்ளி, உலகிலேயே அதிக COVID-19 மீட்டெடுப்புகளை இந்தியா திங்களன்று பதிவு செய்தது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, திங்களன்று இந்தியாவில் மொத்தம் 37,80,107 கோவிட் -19 நோயில் இருந்து குணமாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை பிரேசில் 37,23,206 என்றும், அமெரிக்காவில் 24,51,406 என்றும் இந்தத் தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் தினமும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவானாலும், மீட்பு விகிதமும் அதிகமாகவே உள்ளது நம்பிக்கையளிக்கும் செய்தி ஆகும். இந்தியாவின் மீட்பு விகிதம் 77.88 சதவீதத்தைத் தொட்டுவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
உலகளவில் 19,625,959 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் இந்தத் தரவுகள் கூறுகின்றன. தற்போது, COVID-19 நோயால் உலக அளவில் 29,182,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 9,27,015 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இன்னும் முதலிடத்திலேயே இருக்க, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்திய அரசு பல நடவடிக்கைகளைப் மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதுவரை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மொத்தம் 5,83,12,273 சோதனைகளை நடத்தியுள்ளது. திங்களன்று, மருத்துவ அமைப்பு 10,72,845 மாதிரிகளை பரிசோதித்தது.
Also Read | SP Balasubramanyam இன் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம்: SP Charan தகவல்
கொரோனாவின் தாக்கத்தில் இருந்து குணமடைந்த பிறகு மேற்கொள்ள வேண்டிய புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டது. கோவிட் -19 நோயில் இருந்து குணமடைந்த நோயாளிகள் தினசரி யோகா, காலை அல்லது மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்வது ஆகியவை இந்த பரிந்துரைகளில் அடங்கும்.
கோவிட்-19இல் இருந்து குணமானவர்கள், பிறருக்கு விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், கொரோனா தொடர்பான கட்டுக்கதைகள் தொடர்பான அச்சங்களை மாற்றுவதற்கும் தங்கள் நேர்மறையான அனுபவங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவும் தீவிரமாக முயன்று வருகிறது, கொரோனா மருந்தை வெளியிடுவதற்கான எந்த தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், 2021 முதல் காலாண்டில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் தயாராக இருக்கக்கூடும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஞாயிற்றுக்கிழமையன்று கூறினார். தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்வதில் இந்திய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
Also Read | Sugar Alternatives: சர்க்கரைக்கு 5 ஆரோக்கியமான மாற்று வழிகள் உங்களுக்காக
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR