Sugar Alternatives: சர்க்கரைக்கு 5 ஆரோக்கியமான மாற்று வழிகள் உங்களுக்காக...

சர்க்கரைக்கான ஆரோக்கியமான மாற்றுவழிகளின் அவசியம் தேவைப்படும் காலகட்டம் இது. இனிப்பு இல்லாமல் நம் வாழ்க்கை சுவைக்காது, முழுமையடையாது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2020, 09:12 PM IST
Sugar Alternatives: சர்க்கரைக்கு 5 ஆரோக்கியமான மாற்று வழிகள் உங்களுக்காக... title=

சர்க்கரைக்கான ஆரோக்கியமான மாற்றுவழிகளின் அவசியம் தேவைப்படும் காலகட்டம் இது. இனிப்பு இல்லாமல் நம் வாழ்க்கை சுவைக்காது, முழுமையடையாது. இருப்பினும், எல்லா உணவு வகையிலும் சர்க்கரையை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே சர்க்கைகான மாற்று வழிகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்குங்கள். அதற்கு இந்த 5 வழிகள்உங்களுக்கு உதவலாம்.

 
1. தேன் (Honey)
தேன் இனிப்பு சுவைக்கு சரியான தேர்வு. இயற்கையாகவே இனிப்பு  சுவை கொண்ட தேனில்,  வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்களும் அடங்கியுள்ளன. தண்ணீரும் இருக்கிறது. தேனை உட்கொள்வதால் ரத்த ஓட்டம் மேம்படும், ரத்த அழுத்தம் குறையும். இருமல் மற்றும் சளி போன்றவை ஏற்படாமல் ஆரோக்கியத்தை  பாதுகாக்கலாம். அது மட்டுமல்ல, தேன் சிறந்த ரத்த சுத்தீரிப்பான் என்பதால் சர்க்கரைக்கு சரியான மாற்று என்பது இனிப்பான செய்தி...

2. வெல்லம் (Jaggery)
வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்றவை இந்தியாவின் பரம்பரிய உணவின் அங்கமாய் உணவின் இனிப்பு சுவைக்கு அடிப்படையாக இருப்பவை. இவற்றின் சுவை நன்றாக இருக்கும் என்பதோடு, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துபவை. நமது பாரம்பரிய இனிப்புப் பொருட்களை உண்டால், அஜீரணம், இருமல் போன்ற பிரச்சினைகளை குறையும்.  

3. சீனித்துளசி (Stevia)
ஸ்டீவியா என்ற மருத்துவப்பெயரைக் கொண்ட சீனித்துளசி,  மிட்டாய் இலை (candy leaf), இனிப்பு இலை (sweet leaf) மற்றும் சர்க்கரை இலை (sugar leaf) என்றும் அறியப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மாற்று சர்க்கரையாகும். சீனித்துளசியில் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே,  உடல் எடையை குறைக்க இது சிறந்தது. சீனித்துளசியை உண்பதால் பற்களில் சிதைவு ஏற்படாது, வயிற்றில் அமிலங்கள் உருவாவதைக் குறைக்கும் சீனித்துளசி, ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

4. உலர் பழங்கள்  (Dry fruits)
இனிப்பு சாப்பிட விரும்பினால் உலர்ந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பேரீச்சம்பழம், உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம் பருப்பு போன்றவற்றை உண்பது உடலுக்கு ஆரோக்கியம் நல்கும்.
 
5. பழங்கள் (Fruits)
இனிப்பு சாப்பிட விரும்புவோருக்கு நல்ல மாற்று என்றால் மாம்பழம், வாழைப்பழம், கேரட், பப்பாளி, ஆப்பிள், தர்பூசணி போன்ற பழங்கள். பழங்களில் பல   நன்மைகள் அடங்கியுள்ளன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read Also | நீண்ட நேரம் முகமூடி அணிவதால் ஏற்படும் தோல் எரிச்சலைத் தவிர்க்க சில வழிகள்!!

Trending News