Hypercholesterol: HDL கொலஸ்ட்ரால் குறைவால் அதிகரிக்கும் இதய நோய்கள்... அதிர வைக்கும் ரிபோர்ட்
இரத்தத்தில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, HDL என்னும் நல்ல` கொழுப்பின் அளவு குறையும் நிலைதான் ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா (Hypercholesterolemia) என மருத்துவ மொழியில் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான இதயத்திற்கு உதவும் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ரால் குறைவதால் இதய ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். இரத்தத்தில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, HDL என்னும் நல்ல' கொழுப்பின் அளவு குறையும் நிலைதான் ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா (Hypercholesterolemia) என மருத்துவ மொழியில் கூறப்படுகிறது. கெட்ட கொல்ஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் நல்ல கொல்ஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பதும் முக்கியம்.
இந்தியன் கார்டியாலஜி சொசைட்டி ஆஃப் இந்தியா நடத்திய (Indian Cardiology Society of India) மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் பல்வேறு புவியியல் பகுதிகளில் உள்ள மக்களின் கொழுப்பின் சுயவிவரம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்தியன் ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கையில், இந்தியாவின் கேரளா மற்றும் கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு ஹைபர்கொலஸ்டிரோலீமியா என்னும் நிலை ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஹைபர்கொலஸ்டிரோலீமியா ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகள்
இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற தீவிர நோய்களுக்கு ஹைப்பர் கொலஸ்ட்ரால் முக்கிய காரணமாகும். இது தமனிகளில் கொழுப்பாக படிந்து அவற்றை சுருக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது மாரடைப்பை (Heart Health) ஏற்படுத்தும்
ஹைபர்கொலஸ்டிரோலீமியா என்னும் பிரச்சனை அதிகம் உள்ள மாநிலங்கள்
1. இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் 29.2 சதவிகித மக்களுக்கு ஹைபர்கொலஸ்டிரோலீமியா பிரச்சனை உள்ளது.
2. வடக்கு மாநிலங்களில் உள்ள 28.2 சதவிகித மக்களுக்கு, ஹைபர்கொலஸ்டிரோலீமியா பிரச்சனை உள்ளது.
3. தெற்கு மாநிலங்களில் உள்ள 24.5 சதவிகித மக்களுக்கு, ஹைபர்கொலஸ்டிரோலீமியா பிரச்சனை உள்ளது.
4. கிழக்கு மாநிலங்களில் உள்ள 18.8 சதவிகிதம் பேருக்கு ஹைபர்கொலஸ்டிரோலீமியா பிரச்சனை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
கேரளாவில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை
மொத்த கொலஸ்ட்ரால் அளவிலும் கேரளா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கு 50.3 சதவீத மக்களின் கொலஸ்ட்ரால் அளவு இயல்பை விட அதிகமாக உள்ளது. இதற்குப் பிறகு கோவா 45.6% என்ற அளவிலும் இமாச்சலப் பிரதேசம் 39.6% என்ற அளவிலும் அடுத்த நிலைகளில் உள்ளன.
தென் மாநிலங்களில் அதிகமாக காணப்படும் நல்ல கொலஸ்ட்ரால் குறைவு பிரச்சனை
நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவு குறைவாக இருக்கும் பிரச்சனை தென்னிந்தியாவில் அதிகம் உள்ளது. இங்கு 53.9 சதவீத மக்களுக்கு HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு இயல்பை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கிழக்கு இந்தியா (46.5%), வட இந்தியா (44.6%) மற்றும் மேற்கு இந்தியா (29.3%) ஆகியவை பட்டியலில் உள்ளன.
வட மாநிலங்களிலும் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை
வட இந்தியாவிலும் அதிக அளவிலான மக்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது. இங்கு, 29.1 சதவீத மக்களுக்கு கெட்ட கொழுப்பின் அளவு இயல்பை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மேற்கு இந்தியா 30.2% என்ற அளவிலும், தென்னிந்தியா 23.5% என்ற அளவிலும் மற்றும் கிழக்கு இந்தியா 19.2% என்ற அளவில் உள்ளது.
ஜார்கண்ட் மாநில மக்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவு
ஜார்க்கண்டில் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவாக உள்ளது. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இங்கு 4.6 சதவீத மக்களிடம் மட்டுமே காணப்பட்டது. இதற்குப் பிறகு அசாம் (7.9%) மற்றும் பீகார் (9.7%) உள்ளது.
மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ