இரத்தத்தில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்கள்... விஷமாகும் உப்பு - சர்க்கரை... அதிர வைக்கும் ரிப்போர்ட்
மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆய்வறிக்கை ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரைகளில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் கூடியவை என்பது அனைவரும் அறிந்த விஷயம். பிளாஸ்டிக் துகள்கள் பல்வேறு வழியில் நம் உடலை சென்றடைந்து, பெரிய அளவில் ஆரோக்கிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதை எடுத்துரைக்கும் பல ஆய்வுகள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது கூட உடல் நலத்திற்கு கேடு என்றும், அதன் மூலம் நானோ பிளாஸ்டிக் எனப்படும், நுண்ணிய பிளாஸ்டிக் துண்டுகள் உடலிலும் ரத்தத்திலும் கலக்கின்றன என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
உப்பு மற்றும் சர்க்கரை, நான் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவு பொருள். உப்பில்லாத பொருள் குப்பையிலே என்பார்கள். அதுபோல சர்க்கரை இல்லாத டீ, காபி ருசிப்பதில்லை. அந்த வகையில் நாம் உப்பு சர்க்கரையை தினமும் பயன்படுத்துகிறோம். இந்நிலையில்,மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மற்றொரு, ஆய்வறிக்கை ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரைகளில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வு அறிக்கை இந்திய நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை பிராண்டுகளிலும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பல்வேறு பிராண்டுகளின் உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நம் கண்ணுக்கு தெரியாத வகையில்,மிக சிறிய அளவில், 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்னும் மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது. இந்த பிளாஸ்டிக் துகள்கள் நமது தலைமுடியின் அகலத்தில் 17-ல் ஒரு பங்கை விட சிறியது. ஆனால் உடல் நல் பாதிப்புகள் மனதை பதற வைக்கும்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் துகள்கள் காலப்போக்கில் நம் உடலில் சேர்ந்து, வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உறுப்பு சேதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சிகள் பல கூறுகின்றன. இதன் மூலம், நாம் உப்பையும் சர்க்கரையையும் உண்ணும் ஒவ்வொரு முறையும் நமது ஒவ்வொரு துளி இரத்தமும் விஷமாகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் அதிர வைக்கும் பாதிப்புகள்
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்:
இரத்தத்தில் கலந்து அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் சேரும் பிளாஸ்டிக் துகள்கள், மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
செரிமான ஆரோக்கிய பாதிப்பு:
மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உடலின் செரிமான அமைப்பில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் பாதித்து, உடலில் வீக்கம், வாயு, வயிற்றுபோக்கு, வாந்தி உள்ளிட்ட பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை:
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடலின் ஹார்மோன் அமைப்பை பாதிப்பதால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. இது பாலியல் தொடர்பான பிரச்சனைகள் உட்பட பல உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம்.
நீண்ட கால உடல்நலப் பிரச்சனைகள்:
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் தொடர்ந்து நீண்டகாலமாக, நம் இரத்தத்தில் கலப்பதினால் புற்றுநோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ