தலை முடியை பிய்த்துத் திண்னும் விசித்திர நோய்! எப்படி தப்பிப்பது?
இந்த நோயால் பதிக்கப்பட்ட நபர் தங்களது சொந்த முடிகளை இழுத்து அதை உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பார்
உலகில் உணவு பலவகை! அதை சாபிடுவதிலும் பலவகை! இருப்பினும் இதெல்லாம் வேண்டாம் எனக்கூறி, இந்தூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனது சொந்த முடியை சாப்பிட்டுள்ளார்.
ஆம் உண்மைதான்! இந்தூரின் மஹாராஜா யெஸ்வந்ரோ மருத்துவமனையின் மருத்துவர்கள், இந்தூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து சுமார் 1.5Kg முடியினை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர்.
மருத்துவர்களின் அறிகயின்படி அந்த பெண் 'ரப்யுன்செல் குறைபாட்டால்' பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இது ஒரு அரிய வகையான நோய் எனவும் தெரிவித்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி இதுவரை மொத்தம் 88 பேருக்கு மட்டுமே இந்த நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயால் பதிக்கப்பட்ட நபர் தங்களது சொந்த முடிகளை இழுத்து அதை உண்ணும் பழக்கத்தை கொண்டிருப்பார் என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடுமையான எடை இழப்பு காரணமாக இந்த பெண் மும்பை குவார்க்கோபார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சிகிச்சையின் பொது சி.டி. ஸ்கேன் எடுக்கப் பட்டபோது அவரின் வயிற்றில் முடிகளின் குவியல் இருந்தது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் இந்த குவியல் அகற்றப்பட்டதாக மருத்துவமனையின் அறுவைசிகிச்சைத் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் பாரத் கூறினார்.
'ரப்யுன்செல்' குறைபாடு என்றால் என்ன?
இது மிகவும் அரிதானத நோய், இந்த நோய் பாதிக்கப்படுபவர்கள் தங்களது கூந்தலினை தானே உண்ணும் பழக்கம் கொண்டிருப்பார். இது வயிற்றில் ஒரு வகையான கட்டியினை உருவாக்குகிறது.
இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
வயிற்றில் உள்ள சிறு குடலில் அல்லது பெருகுடல் பகுதிகளில், முடிகளின் குவியலுடன் கூடிய கட்டி போன்ற அமைப்பு ஒன்று தென்படும்.
சிறுகுடல் அல்லது பெருகுடல் அடைப்பு.
வழக்கத்திற்கு மாறாக மனநோயாளி போன்ற செயல்பாடுகள்.
தலை முடியைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் என்ற இயற்கைக்கு மீறிய ஆவல்.
சிகிச்சை:
இதனை டிஸ்ட்ரோக்சோஜார் அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டும், இல்லையெனில் மனித இரைப்பை குடல் பாதையில் முடிகள் மாட்டிகொல்வதால் ஜீரணிக்க இயலாது.
இவ்வகை நோயாளிகளுக்கு பொதுவாக மனநல மதிப்பீடு செய்வதன் மூலம் இவர்களுக்கான சிறந்த மனமாற்றத்தினை அழிக்க இயலும்