பீர் குடிப்பது நல்லதா கெட்டதா என நமக்குள் எப்போதும் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டே இருக்கும். உண்மையாகவே பீர் நம் உடலுக்கு கெடுதல் மட்டும்தான் செய்கிறதா..? இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீர் தினம்:


உலகளவில் இன்று, பீர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத்தாண்டி, உலக நாடுகளில் பீர் குடிப்பது சகஜம். நண்பர்களை சந்திக்கையில், சுற்றுலா செல்கையில் என எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மக்கள் பீர் குடிக்கும் பழக்கத்தினை கொண்டுள்ளனர். உலகத்தில் உள்ள அனைத்து பீர் வகை கலாச்சாரங்களையும் போற்றும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை குடித்து மக்கள் ஒருவருக்கொருவர் அன்பினை பரிமாறிக்கொள்கின்றனர். 


பீர்-தீமைகள்:


குடிப்பழக்கம் உள்ளவர்கள் பீரை விரும்புதில்லை. காரணம், அது மது கொடுக்கும் போதையை கொடுக்காது என்பதால்தான். பீரிலும் ஆல்கஹால் கலந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதில் மதுவில் உள்ள ஆல்கஹாலை விட மிகவும் குறைவான அளவிலேயே இருக்கும். ஆனாலும், இதிலும் நச்சுத்தன்மை கலந்துள்ளது. பீர் அதிகமாக குடிப்பவர்கள் பல்வேறு உடல் பாதிப்புகளால் அவதியுறுகின்றனர். பீரில் எவ்வளவு ஆல்கஹால் கலந்து இருக்கிறது என்பதை பொருத்து அதை எடுத்துக்கொள்ளும் அளவும் மாறுபடும். சிலர், பீரில் பெரிதாக மது இல்லை என நினைத்துக்கொண்டு அதிகம் குடிப்பதுண்டு. அப்படி என்ன குடிக்கிறோம் என்பதை தெரியாமல் அதிக பீரை குடித்துவிட்டால் அது கல்லீரல் பாதிப்பில் கொண்டு போய் விட்டுவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், உடல் எடை அதிகமாவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படுமாம். சிறிய அளவில் பீர் எடுத்துக்கொள்வதால் நம் உடலுக்கு நன்மை ஏற்படுவதாகவும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அவை என்ன..? 


மேலும் படிக்க | இதயம் - மூளை இரண்டையும் காக்கும்... தாய் பாலின் சத்துக்கள் நிறைந்த தேங்காய்!


பீர்- நன்மைகள்..!


பீர் அதிகம் குடித்தால் உடலுக்கு தீமை ஏற்படுவது போல, அதை குறைவாக குடித்தால் உடலுக்கு நன்மையும் ஏற்படுமாம். கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், மற்றும் கலோரி ஆகியவற்றின் அளவுகள் குறைவாக இருக்கும் பீர் பானங்களை குறைவான அளவில் பருகினால் உடலுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம் என சில ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் உடலில் மதுவின் அளவு அதிகமாக இருந்தால் உடல் நலனில் பிரச்சனை ஏற்படுவது போல, மதுவின் அளவு உடலில் இல்லவே இல்லை என்றாலும் பிரச்சனை ஏற்படும் என்கின்றனர், சில ஆய்வாளர்கள். ஆனாலும், பீர் பருகினால் அதன் அளவு கண்டிப்பாக அதிகமாக இருக்க கூடாது எனவும் எச்சரிக்கின்றனர். 


பீர் குடிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்குமா..? 


அமெரிக்காவில், மது அருந்துபவர்களை விடவும், மதுவே அருந்தாமல் இருப்பவர்களை விடவும் குறைவாயன அளவில் பீர் எடுத்துக்கொள்பவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைவான அளவில் பீர் குடித்தோர், 90 வயது வரை வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மது அல்லது பீர் குடிக்காதவர்களோ, அதிகம் மது குடித்தவர்களோ அவ்வளவு நாட்கள் உயிர்வாழவில்லை என்பதும் அந்த ஆய்வில தெரிய வந்துள்ளது. 


கொழுப்பின் அளவு அதிகரிக்குமா?


நம் உடலில் உள்ள ஹெச்டிஎல் மற்றும் எல்.டி.எல் வகை கொழுப்பின் அளவுகளை பீர் அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஹெச்.டி.எல் வகை கொழுப்பு நல்ல கொழுப்பு. எல்.டி.எல் வகை கொழுப்பு, கெட்ட கொழுப்பு. சிறிய அளவிலான பீர் நம் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு கொஞ்சமாக பீர் குடித்தால் அந்த கொழுப்பு 4 சதவிகிதம் அதிகரிக்குமாம். 


யார் யாரெல்லாம் பீர் குடிக்கக்கூடாது:


பீர், ஒரு சில வயது வரம்பினரும் உடல் நலனில் எந்த பிரச்சனையும் இல்லாதோரும் மட்டுமே பீர் அருந்த தகுதியானவர்கள். யார் யாரெல்லாம் பீர் குடிக்கக்கூடாது..?


>21 வயதினரும் அதற்கு கீழுள்ளவர்களும் பீர் குடிக்கக்கூடாது. 


>கர்பமாக உள்ளவர்கள் பீர் குடிக்கக்கூடாது. 


>வாகனம் ஓட்டுபவர்கள் பீர் குடிக்கக்கூடாது. பீர் அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. 


>எப்போதும் விழிப்புடன் இருக்கும் வேலையில் ஈடுபடுவோர் பீர் குடிக்கக்கூடாது. 


>ஏதேனும் உடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வோர் பீர் அருந்தக்கூடாது. 


>மது பிரச்சனையில் இருந்து மீண்டோர் பீர் குடிக்கக்கூடாது. 


மேலும் படிக்க | முக சுருக்கங்கள் மாயமாய் மறைய... வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ