பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். இது பியர் எனவும் அழைக்கப்படுகிறது. பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
விஸ்கி அல்லது ரம்மில் உள்ளதை விட பீர் பானத்தில் ஆல்கஹால் அளவு குறைவாக உள்ளதால், பீர் (Beer) உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தியாவில் சுமார் 30% மக்களுக்கு பீர் அருந்தும் பழக்கம் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
பீர் இல்லாத பார்ட்டி முழுமையடையாது. பீர் குடிப்பது நவீன வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாக ஆகி விட்டது எனலாம். பொதுவாக, பீட்சா, சிக்கன், பக்கோடாக்கள், உலர் பழங்கள் போன்றவை பார்ட்டிகளில் பீருடன் பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், பீர் சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ALSO READ | பீர் பாட்டில்களின் நிறம் பழுப்பு, பச்சை நிறங்களில் இருப்பதற்கான காரணம் என்ன.!!
பீர் அல்லது ஒயின் (Wine) குடிப்பதற்கு சில விதிகள் உள்ளன. குறைந்த அளவு ஒயின் அல்லது பீர் உட்கொள்வது உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் என்று பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதேபோல், வெறும் வயிற்றில் மது அருந்துவது அல்லது பொருத்தம் இல்லாத உணவுகளை உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தும். இது நீரிழப்பு மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். பீருடன் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்று பார்ப்போம்.
பிரெட் அல்லது பிரட்டினால் செய்யப்பட்ட பொருட்கள்
பிரெட்டினால் (Bread) செய்யப்பட்ட எதையும் பீருடன் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரண்டு பொருட்களிலும் ஈஸ்ட் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக ஈஸ்டை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியாது. இதன் காரணமாக, உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் அல்லது கேண்டிடா எனப்படும் அதிக அளு ஈஸ்டினால் ஏற்படும் பூஞ்ஞை பிரச்சனை ஏற்படலாம்
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், அதை பீர் உடன் எடுத்துக்கொள்வது பிரச்சனைகளை ஏற்படுத்தும். மற்ற அமில உணவுகளைப் போலவே, சாக்லேட்டிலும் காஃபின், கொழுப்பு மற்றும் கோகோ உள்ளது. பீர் உடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
காரமான உணவுகள்
பீருடன் காரமான பொருட்களை உட்கொள்வது அனைவருக்குமே மிகவும் பிடிக்கும் என்றாலும், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காரமான பொருட்களில் கேப்சைசின் உள்ளது. இது வயிற்று எரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக உப்பு சேர்த்த உணவுகள்
பெரும்பாலானோருக்கு உப்பு சேர்த்த வேர்க்கடலை, உலர் பழங்கள் அல்லதுமற்ற வகை தின்பண்டங்களை பீருடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். இந்த பொருட்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது நீரிழப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இது எடிமா மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
பர்கர் அல்லது பிரஞ்சு பிரைஸ்
பீர் உடன் பிரஞ்சு பிரைஸ் போன்ற உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம். உண்மையில், அதிக உப்பு சேர்த்த தின்பண்டங்களில் அதிக அளவு சோடியம் உள்ளது, இது நீங்கள் மது அருந்தும்போது உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு நிறைந்த பொருட்கள் உங்கள் தாகத்தையும் அதிகரிக்கும், அதனால் நீங்கள் அதிகமாக குடிக்கலாம். மேலும், பீர் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது. இது அதிகமாக சிறுநீர் கழிக்க வகை செய்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு விஷயத்தையும் செயல்படுத்தும் முன், சம்பந்தப்பட்ட நிபுணரைத் தொடர்பு கொள்ளவும். Zee News அதற்குப் பொறுப்பேற்காது.)
ALSO READ | Osteoporosis: எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்க கால்ஷியம் மட்டும் போதாது ..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR