இதயம் - மூளை இரண்டையும் காக்கும்... தாய் பாலின் சத்துக்கள் நிறைந்த தேங்காய்!

தென்னிந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது.

தேங்காயில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் உடலின் ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. தேங்காயுடன், அதன் எண்ணெயும் மிகவும் அற்புதமான பலன்கள் கொண்டது.

1 /7

எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய தேங்காயில் தாய் பாலின் சத்துக்களும் உள்ளது என கூறப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர். 

2 /7

தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3 /7

தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனெனில் இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. காரணம் தேங்காயில் உள்ள நிறைவுறு கொழுப்பு அமிலங்கள். இந்த கொழுப்பு வகையில் சங்கிலி தொடர் எளிதில் உடைந்து கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. எனவே அதிக கொலஸ்ட்ரால் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.

4 /7

தேங்காய் ஒரு சிறந்த ஆண்டிபயாடிக் என்பதால், அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும், அதாவது அலர்ஜியில் இருந்தும் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.

5 /7

தேங்காயில் அதிக நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் மலச்சிக்கலை போக்கும். தேங்காயில் வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கும் மோனோ லாரின் உள்ளது. வயிற்றில் பூச்சிகள் இருந்தால், இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் ஒரு ஸ்பூன் தேங்காயை எடுத்துக்கொண்டால், பூச்சிகள் இறக்கின்றன.

6 /7

தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் காப்ரிக் அமிலம் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். 

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.