ஷாம்பு போடும் முன்பு தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? கெட்டதா?
Oil Hair Before Shampoo: தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது முக்கியமான ஒன்று. முடி சேதமடையாமல், ஈரப்பதமுடன் இருப்பதற்கு எண்ணெய் தடவுவது முக்கியம்.
தலைக்கு ஷாம்பு போடும் முன், முடிக்கு எண்ணெய் தடவுவது நீண்ட நாட்களாக இருந்து வரும் ஒரு பாரம்பரிய முடி பராமரிப்பு ஆகும், இது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் விசேஷ நாட்களில் இப்படி செய்வது வழக்கம். ஷாம்புக்கு முன் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது இயற்கையாகவே பல நன்மைகளை கொண்டுள்ளது. தலைக்கு எண்ணெய் தடவுவது பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது சிறந்த முடியை பெற முக்கியமானது. வெவ்வேறு எண்ணெய்கள் வெவ்வேறு முடி வகைகள் மற்றும் கவலைகளை பூர்த்தி செய்கின்றன.
மேலும் படிக்க | Health Tips: முள்ளங்கியை எப்படியெல்லாம் சாப்பிட்டா டாக்டருக்கு செலவு செய்ய வேண்டாம்?
எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!
தலைக்கு ஷாம்பு போடும் முன் முடிக்கு எண்ணெய் தடவுவது தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. எண்ணெய் முடிக்கு அடியில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது, இது முடிக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது முடி அதிக ஈரப்பதத்தை இழப்பதைத் தடுக்கிறது. முடிக்கு எண்ணெய் தடவுவதால், முடியின் மேற்புறத்தை மென்மையாக்கவும், உதிர்வதைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த முடியின் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும். வறண்ட அல்லது அதிக முடி உதிர்வு கொண்ட நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தலையில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தைத் அதிகப்படுத்துகிறது. மேலும் இது ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் சில எண்ணெய்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தலையில் ஷாம்பு பயன்படுத்தும் முன்பு எண்ணெய் தடவுவது பளபளப்பான மற்றும் மென்மையான முடியை கொண்டு வர உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடிக்கு இயற்கையான பளபளப்பைச் கொடுக்கிறது. முடி ஈரமாக இருந்தால் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே எண்ணெய் தடவுவது முடி சேதமடைவதை தடுக்கிறது. தலைக்கு எண்ணெய் தடவினால் முடி அதிக வழுக்கும் தன்மையுடையதாக இருக்கும். நீண்ட அல்லது சுருள் முடி கொண்டவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது எப்படி?
தலைக்கு தேய்க்கப்படும் ஒவ்வொரு எண்ணையும் ஒவ்வொரு நன்மைகளை தருகிறது. எடுத்துக்காட்டாக, தேங்காய் எண்ணெய் அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் ஆக்ஸிஜனேற்றத்தில் நிறைந்துள்ளது. உங்கள் தலைமுடியின் வகை மற்றும் உங்களின் தேவைகளை பொறுத்து எண்ணெயை தேர்வு செய்வது நல்லது. ஷாம்பு போடும் முன்பு, சிறிது சூடான எண்ணெய்யை தலைக்கு தடவுவது நல்லது. இது முடியின் தண்டுக்குள் எண்ணெய் செல்ல உதவுகிறது.
முக்கியமாக எண்ணெய் தலையில் அனைத்து இடங்களிலும் இருப்பதை உறுதி செய்யவும். அதன் பிறகு உங்கள் விரலை வைத்து மெதுவாக மசாஜ் செய்யவும். இது முடிக்கு நன்கு ஊட்டமளிக்கும். ஷாம்பு போடும் முன்பு, குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு தலையில் எண்ணெய் வைத்து ஊறவைக்கவும். இதன் பிறகு எண்ணெயை அகற்ற உங்கள் தலைமுடியை நன்கு ஷாம்பு போட்டு கழுவவும். ஈரப்பதத்தை மீட்டெடுக்க கண்டிஷனரை பயன்படுத்தலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
வறண்ட அல்லது சேதமடைந்த முடி கொண்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கையாகவே எண்ணெய் பசையுள்ள முடி உள்ளவர்களுக்கு மேற்க்கூடிய நடவடிக்கை தேவைப்படாது. சிலர் தங்கள் முடிக்கு வாரந்தோறும் எண்ணெய் தடவுகிறார்கள், ஒருசிலர் மாதம் 2 முறை எண்ணெய் தடவி ஷாம்பு போடுகின்றனர். இது அவர்களின் முடியின் தேவையை பொறுத்தது. மேலும் அதிகப்படியான எண்ணெயைப் பயன்படுத்துவது முடியை க்ரீஸாக மாற்றலாம். எனவே உங்கள் முடி வகை மற்றும் நீளத்திற்கு சரியான அளவைக் கண்டுபிடிப்பது அவசியம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ