Diabetes Control Tips: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் முடிந்தவரை பழங்களையும் காய்களையும் அதிகமாக சாப்பிட வேண்டும். குறிப்பாக பழங்கள் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
Diabetes Control Tips: நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. எனினும், இதை உணவுப்பழக்கம் மற்றும் சில உடல் செயல்பாடுகள் மூலம் பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் முறையான உணவுப்பழக்கத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றினால், இந்த நோயை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்கலாம். சில பழங்களை தோலுடன் சாப்பிட்டால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த காலத்தில் நீரிழிவு நோய் பலரிடம் காணப்படுகின்றது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இது மக்களிடம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில பழங்களை தோல் உரிக்காமல் உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். எந்தெந்த பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
சிலர் திராட்சை கெட்டியாக இருந்தால் தோலை நீக்கி விடுவார்கள். இப்படி செய்வதால் திராட்சையில் உள்ள சத்துக்கள் குறையும். நீரிழிவு நோயாளிகள் திராட்சையை குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். அதுவும் திராட்சை பழங்களை தோலுடன் சாப்பிடுவது மட்டுமே நன்மை பயக்கும். திராட்சை பழத்தை விட அதன் தோலில் இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை அதிகம் உள்ளது.
நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்கள் வாழைப்பழத்தையும் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். வாழைப்பழத்தை தோல் நீக்கிய பிறகுதான் அனைவரும் சாப்பிடுவார்கள், ஆனால் வாழைப்பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
பப்பாளி சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறையும். பெரும்பாலானோர் பப்பாளி பழத்தை தோலை நீக்கிய பிறகே சாப்பிட்டாலும், சர்க்கரை நோயாளிகள் பப்பாளியை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன்கள் மேலும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கொய்யா சாப்பிடலாம். இதில் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் குணங்கள் உள்ளன. சிலர் கொய்யாப்பழத்தை தோலை நீக்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இதை தோலுடன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில், கொய்யாத் தோலில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
ரசாயனங்கள் மற்றும் மெழுகு இருக்குமோ என்ற அச்சம் காரணமாக பல நேரங்களில் ஆப்பிளின் தோலை நீக்கி உட்கொள்கிறோம். ஆனால் ஆப்பிளுக்கான சீசனில் ஆப்பிளை உரிக்காமல் சாப்பிட வேண்டும். ஆப்பிள் தோலை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். தோலை நீக்காமல் சாப்பிட்டால் சர்க்கரை நோயில் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை