Appetite Connection With Depression: நம்மை பாதிக்கும் மனநோய்க்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், மன உளைச்சல் உருவாக்கும் விஷயங்களே மனச்சோர்வுக்கு அடிப்படை காரணமாகிறது. அதேபோல சிலவிதமான உடல் நலக் கோளாறுகளும் மனச்சோர்வுக்கு காரணம் ஆகின்றன.  காரணம் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை மீதான பிடிப்பை குறைப்பதும், சிறு விஷயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. பசியின்மை மற்றும் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட பல நோய்களுக்கு மனச்சோர்வு காரணமாக இருக்கிறது. மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கும் சிக்கலில், மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்சனைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் பல விஷயங்களை தெளிவுபடுத்துகின்றன. டுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் டாக்டர் நில்ஸ் க்ரோமர் தலைமையிலான குழுவுடன், பான் பல்கலைக்கழகத்தின் மருத்துமனையும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.


மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 


பசியில் ஏற்படும் மாற்றங்கள் மனச்சோர்வை அதிகரிக்கிறதா இல்லை குறைக்கிறதா என்ற கருப்பொருளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் அவதானிப்ப்பில், மனச்சோர்வின் பல முகங்களும் விரிவாக அலசப்பட்டு இருக்கின்றன. மன உந்துதல், உணர்ச்சிகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் மனச்சோர்வு வகைப்படுத்தப்படுகிறது. 


மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், எந்தவொரு வேலையிலும் ஊக்கம், உந்துதல் மற்றும் ஆர்வத்தை இழப்பதுடன் பசியின்மையையும் எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில், மனசோர்வால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அதீத பசி எடுப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. மனச்சோர்வுக்கான இந்த அறிகுறிகளில் ஏன் இந்த வேறுபாடு என்பதும் அவற்றுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது தொடர்பான தரவுகள் இதுவரை இல்லை.


பசி எடுப்பதும் பசியின்மையும் உணவு உட்கொள்ளலில் தாகத்தை ஏற்படுத்துவதால் உடல் எடை கூடுவதும் குறைவதும் நிகழ்கிறது. அதாவது பசிக்கும் மனச்சோர்வுக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது.


மேலும் படிக்க |  மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க


காந்த அதிர்வு இமேஜிங் பயன்பாட்டின் மூலம் மனசோர்வுடன் தொடர்புடைய பசியின்மைக்கு சிகிச்சை அளிக்கலாம் என்பதை இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. பல ஜெர்மன் பல்கலைக்கழக மருத்துவமனைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழு, மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த ஆய்வை ஏற்கொண்டது. பங்கேற்பாளர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வு செய்து அவர்கர்ளின் உளவியல் அறிகுறைகளை பதிவு செய்தது.


இதற்காக ஆய்வாளர்கள், இணைப்பு வலிமை என்று அழைக்கப்படும் நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸின் செயல்பாட்டு இணைப்பை பயன்படுத்தலாம் என்று சொல்கின்றனர். இது, ஒருவரின் நடத்தையை கட்டுப்படுத்தும் மையங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மனச்சோர்வுக்கும் சுவை தூண்டுதல்கள், உடல் சமிக்ஞைகள் மற்றும் மூளையின் பகுதிக்கும் இடையில் இணைப்பு பலவீனமாக உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


மேலும் படிக்க | Cervical Pain: கழுத்து வலியில் இருந்து விடுபட சில எளிய பயிற்சிகள்! 


மேலும் படிக்க | ஆரோக்கியத்தின் விருட்சமாக விரியும் இலுப்பை! மருந்தே மரமாக உருவெடுத்ததோ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ