உறக்கத்தை தவிர்த்தால் இவ்வளவு பிரச்சனையா?
ஐக்கிய நாடுகளின் கென்டக்கியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன், 11 நாள் ஆழ்ந்த தூக்கத்திற்கு பிறகு விழித்தெழுந்தான்!
ஐக்கிய நாடுகளின் எலிசபெத் டவுன், கென்டக்கியை சேர்ந்த சிறுவன் வைட் ஷா, தனது திருமண் நிகழ்ச்சியில் பங்கேற்றப் பின் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியுள்ளான். பதினொரு நாட்களாய் அவனது தாயாரும் அவனை எழுப்ப முயற்சித்துள்ளார் ஆனால் பயனில்லை.
வைட் ஷா-வின் இந்த ஆழ்ந்த தூக்கத்திற்கான காரணத்தினை மருத்துவர்கள் கண்டறிய முயற்சி செய்து வந்தனர்.
முதற்கட்டமாக வைட் ஷா-விற்கு, ஒட்டுண்ணிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் தொற்று நோய் உள்ளதா என மருத்துவர்கள் பரிசோதித்தனர், அனைத்து சோதனைகளும் சில அறிகுறிகளை கொடுத்த போதிலும் சரியான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
எனினும் தங்களது முயற்சியை கைவிடாத மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இறுதியில் சிகிச்சையின் பயனாக வைட் ஷா முழித்துக்கொண்டான், இருப்பினும் சிறுவனது தூக்கத்திற்கான காரணம் அறியப்படவில்லை!
சுகாதார வல்லுனர்கள் இதுகுறித்து கூறுகையில், சரியான தூக்கம் இன்மை, மனஅழுத்தம், சீரான கால நேரங்களில் தூங்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் இதுபோன்ற கோளாருகள் வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.