Immunity: தேனுடன் சேர்ந்தால் நெல்லிக்காய் செய்யும் மாயாஜாலம்! அதனுடன் கொஞ்சூண்டு மிளகு!
Immunity Booster Tips From Sadhguru: இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சத்குரு பரிந்துரைத்த இந்த வீட்டு வைத்தியத்தை டிரை பண்ணிப் பாருங்க...
நோய்களைத் தவிர்க்க விரும்பாதவர் யாருமே இருக்க முடியாது. ஆனால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இது மிகவும் கடினமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இல்லையென்றால் ஒரு நபர் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். இது வாழும் வாழ்க்கையின் தரத்தையும் ஆயுளையும் பாதிக்கிறது.
சிறந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கி எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தைச் சொல்வார்கள். ’எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப சொல்பவர்கள் சொன்னால், அந்த வார்த்தைக்கும் வலு சேரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஈஷா யோக மையத்தின் சத்குரு என்ன சொல்கிறார் தெரியுமா?
நோய்களிலிருந்து பாதுகாக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சத்குரு பரிந்துரைத்த இந்த வீட்டு வைத்தியத்தை பயன்படுத்திப் பாருங்கள்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்குரு சொன்ன உதவிக் குறிப்பு
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது மிகவும் முக்கியம். இயற்கையான மற்றும் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மிக எளிதாக நோயெதிர்ப்பு சக்திக்கு வலுவூட்டலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டு வைத்தியம் இது.
மேலும் படிக்க | இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது இவ்வளவு சுலபமா? இத்தனை நாள் தெரியாம போயிடுச்சே!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள்
தேன்
நெல்லிக்காய்
கருமிளகு தூள்
நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை தயார் செய்வது எப்படி?
இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மூன்று ஸ்பூன் தேன், நெல்லிக்காய், கருப்பு மிளகு மூன்றுமே சிறந்தவைகள் ஆகும். தேனில் இரவு முழுவதும் நெல்லிக்காய் மற்றும் குருமிளகுத்தூளை கலந்து வைக்கவும். காலையில் எழுந்து இந்த தேனில் ஊறிய நெல்லிக்காயை சாப்பிட்டால், சுவையும் நன்றாக இருக்கும், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தினமும் தேன், நெல்லிக்காய் மற்றும் கருப்பு மிளகு கலந்த மொரப்பாவை சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது நல்லது.
தேன், நெல்லிக்காய் மற்றும் கருப்பு மிளகு கலவையின் அதிசயம்
அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது தேன், இது சுவாச அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி ஏராளமாக உள்ள நெல்லிக்காய், உடலை நோயிலிருந்து விரைவாக மீட்க உதவுகிறது என்றால், குருமிளகில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலை நச்சுத்தன்மை மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
இந்த மூன்றும் சேர்ந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்தக் கலவை, இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை குறைத்து பாதுகாப்புடன் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் ஒரு அற்புதமான மருந்தாக பார்க்கப்படுகிறது. இது பல நோய்களைத் தடுக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோலத் தான் தேன் மற்றும் மிளகும் அபூர்வமான பண்புகளைக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க | ரெண்டே வாரத்துல கத்தை கத்தையா முடி வளர இந்த ஆயுர்வேத மூலிகை ஒன்று போதும்
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
நோய்களைத் தவிர்க்க விரும்பாதவர் யார்? ஆனால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இது மிகவும் கடினமாகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு நபர் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். மாறாக, அவரது ஆயுட்காலமும் பாதிக்கப்படுகிறது.