நரைமுடி பிரச்சனையை தீர்க்க வீட்டு வைத்தியம்: பொதுவாக கூந்தலில் வெள்ளி மின்னல்கள் என்று வர்ணிக்கப்பட்டாலும் நரைமுடியை யாரும் விரும்புவதில்லை. இந்த நரை முடியை நாம் வயதான காலத்தில் தவிர்க்க முடியாது. ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனையை ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான காரணங்கள் மோசமான வாழ்க்கை முறை, மண அழுத்தம், மரபியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், உடல்நல பிரச்சனைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள். இவை மெலனோசைட்டுகள் எப்படி செயல்படுகின்றன என்பதை பாதிக்கின்றன. மற்றும் நிறமி உற்பத்தியை குறைத்து முன்கூட்டிய நரை முடியை உண்டு செய்கின்றன. எனவே இந்த இளநரைக்கு காரணங்கள் என்ன. ஏன் மற்றவர்களை விட உங்களுக்கு இளநரை வந்துள்ளது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
கருப்பு முடி ஏன் வெள்ளையாக மாறுகிறது?
நமது கூந்தல் மெலனின் எனப்படும் நிறமியிலிருந்து அதன் நிறத்தை பெறுகிறது. மெலனின் மெலனோசைட் செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த செல்கள் தோலின் ஆழமான அடுக்கில் முடி பாப்பிலாவிற்கு சற்று மேல் அமைந்துள்ளன. மெலனினில் இரண்டு வகைகள் ஆகும், ஒன்று யூமெலனின், மற்றொன்று பியோமெலனின். இதில் பியோமெலனின் கூந்தலில் மஞ்சள நிறங்களை உண்டு செய்கிறது. பொதுவாக மெலனோசைட்டுகள் குறைவாக இருப்பதால் மெலனின் உற்பத்தி குறைவதால் உடல் வயதாகும் போது முடி நரைக்கிறது.
மேலும் படிக்க | Cervical Cancer: கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் இவைதான்!
நரை முடிக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்:
இந்நிலையில் அசிங்கமாக இருக்கும் நரை முடிக்கு (White Hair Problem) ஒரேடியாக தீர்வு பெற நினைத்தால் சமையலறையில் இருக்கும் கடுகெண்ணெய் மற்றும் வெந்தயத்தை பயன்படுத்தலாம்.
இதில் கடுகெண்ணெய் வட மாநிலங்களில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும், இந்த கடுகெண்ணெயை சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் போன்றவற்றைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் கடுகெண்ணெயில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தால், இவை கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது தவிர, இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
கருகரு முடிக்கு கடுகு எண்ணெயை வெந்தியத்துடன் பயன்படுத்தவும்:
கடுகு எண்ணெயில் சிறிது வெந்தயத்தை சேர்த்து கூந்தலில் பயன்படுத்தினால் நரை முடியை கருப்பாக்கலாம். இதைக்கு முதலில் கடுகு எண்ணெயில் சிறிது வெந்தயத்தை போட்டு எண்ணெயை நன்றாக சூடாக்கி, அதை ஆறவிடவும். பின்னர் இந்த எண்ணெயை முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்து வெதுவெதுபான நீரில் கூந்தலை கழுவவும். இந்த மேஜிக் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரத் தொடங்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Bone Health: இதையெல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க... எலும்பு வீக் ஆயிடும் எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ