ஜூஸ் அல்லது டீயுடன் மருந்து சாப்பிடுகிறீர்களா? உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்
பெரும்பாலான மக்களுக்கு தண்ணீருடன் தான் மருந்து சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் சிலருக்கு டீ அல்லது பழசாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. உங்களுக்கு அந்த பழக்கம் இருந்தால், இந்த செய்தியை கண்டிப்பாக படியுங்கள்.
நீங்களும் ஜூஸ் அல்லது டீயுடன் மருந்து சாப்பிடுகிறீர்களா? உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கலாம்
பெரும்பாலான மக்களுக்கு தண்ணீருடன் தான் மருந்து சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் சிலருக்கு டீ அல்லது பழசாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. உங்களுக்கு அந்த பழக்கம் இருந்தால், இந்த செய்தியை கண்டிப்பாக படியுங்கள்.
அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர். சிட்ரஸ் பழங்களுடன் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது என்பது இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்றே அந்த பழக்கத்தை விட்டு விடவும்.
ஒருவர் ஏன் தேநீர் அல்லது பழச்சாறுடன், அதாவது ஜூஸுடன் மருந்து சாப்பிடக்கூடாது, என்ன விதமான பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேநீர் அதாவது டீயுடன் ஏன் மருந்துகளை எடுக்கக்கூடாது
தேநீரில் டானின் (Tannin) உள்ளது. இது மருந்துடன் சேர்ந்து ஒரு இரசாயன எதிர்வினை செய்கிறது. மருந்துகளை, தேநீர் மற்றும் காபியுடன் மருந்து உட்கொள்வதன் மூலம் அதன் செயல் திறனும் குறையும் . சில நேரங்களில், மருந்தின் செயல் திறன் முற்றிலுமாக அழிந்து விடலாம்.
ALSO READ | ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. கோடையில் முட்டை சாப்பிடலாமா..!!!
ஜூஸ், அதாவது பழச்சாறுடன் ஏன் மருந்து எடுக்கக்கூடாது
பழச்சாறுடன் மருந்தை உட்கொள்வதனாலும் மருந்தின செயல்திறன் குறைகிறது. சிட்ரஸ் பழச்சாறுகள் மருந்தின் செயல்திறனை குறைக்கின்றன. இதனுடன், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Anti-biotic) செயல்திறனும் குறைகிறது. பழசாறு மருந்தை கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
அதோடு, ஜூஸ் அல்லது டீயுடன் மருந்தை எடுத்துக் கொள்ளும் போது சில அரிதான நேரங்களில், அதன் எதிர் வினை காரணமாக உயிருகே ஆபத்தும் ஏற்படலாம்.
ALSO READ | தர்பூசணி சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறியாதீர்கள்; அதில் அவ்வ்வ்வளவு நன்மை இருக்கு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR