தர்பூசணி கோடைகாலத்தில் சந்தையில் அதிகம் விற்கப்படுகின்றன. தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடை காலத்தில் இதனை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள். இது உடலில் ஏற்படும் நீரிழப்பிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், நீர் சத்தை பராமரிக்கவும் உதவுகிறது. தர்பூசணி சாப்பிடும்போது, மக்கள் அதன் உள்ளே இருக்கும் சிவப்பு பகுதியை சாப்பிடுகிறார்கள், ஆனால் வெளிப்புற தோல் பகுதியை தூக்கி எறிவார்கள். தர்பூசணியுடன் அதன் தோலிலும் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன தர்பூசணி தோல்களின் நன்மைகளைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
நார்ச்சத்து நிறைந்தவை - தர்பூசணி தோல்களில் காணப்படும் நார்ச்சத்து அளவு மிகவும் அதிகமாக உள்ளது. நார் சத்தின் காரணமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஜீரணத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ALSO READ | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் உடல் நலனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!
எடை இழப்புக்கு உதவும் - தர்பூசணி தோல்களில் நார்ச்சத்து இருப்பதால், எடையை குறைப்பதற்கும் இது உங்களுக்கு உதவுகிறது. எடை இழக்க, நீங்கள் இதனை ஒரு சாலட் ஆக சாப்பிடலாம். இதில் கலோரி மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இது உங்கள் மெடபாலிஸம் அதாவது, வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.
நல்ல தூக்கம் கிடைக்கும் - உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தர்பூசணி தோல்களைப் பயன்படுத்தலாம். இதில் மெக்னீசியம் உள்ளது, இது தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
சுருக்கங்கள்: தர்பூசணியின் தோல்களில் லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. இது கரும்புள்ளிகள், சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி, இளைமையான தோற்றத்தை கொடுக்கிறது. தர்பூசணி தோல்களைத் தேய்த்தால், உடல் சுருக்கங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கும். அதோடு, நீர் சத்து குறைபட்டை போக்குவதால் வறட்சி இல்லாமல் இருக்கும்.
ALSO READ | ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. கோடையில் முட்டை சாப்பிடலாமா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR