புகை படிப்பவர்கள் கவனத்திற்கு! நுரையீரலில் சேரும் கார்பனை அகற்றும் வெல்லம்!
வெல்லம் ஒரு அதிசய உணவாகவும், சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகவும் கருதப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் அதிகம் விரும்பப்படுகிறது. நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை வெல்லத்தில் உள்ளது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது.
தற்போதைய வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, புகை பழக்கம் போன்றவற்றினால், நுரையீரலில் அழுக்குகளும் நச்சுக்களும் சேர்வதால், நுரையீரல் பலவீனமடைகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக் கூடும். அதனை அலட்சியம் செய்தால், ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் தொற்று மற்றும் நுரையீரலில் நீர் நிரப்புதல் போன்ற கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வெல்லம் ஒரு அதிசய உணவாகவும், சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் அதிகம் விரும்பப்படுகிறது. நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை வெல்லத்தில் உள்ளது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது.
இந்திய தாய்மார்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு வெல்லத்தை கொடுக்கும் பழக்கம் உள்ளது. ஒரு சிறிய துண்டு வெல்லம் குழந்தைகளுக்கு மென்று சாப்பிட கொடுப்பார்கள், இது தவிர, வெல்லம் பாயசம், அதிரசம் போன்ற இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, வெல்லம், இஞ்சி மற்றும் துளசி இலைகள் இருமல் மற்றும் ஜலதோஷத்தின் போது கொடுக்கப்படுகின்றன. சிமென்ட் தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கம் அல்லது தூசி - மண் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு வெல்லம் கொடுக்கப்படுவதற்கான காரணம் இதுதான்.
நுரையீரல் ஆரோக்கியத்தில் வெல்லம்
வெல்லம் நுரையீரலை உள்ளே இருந்து சுத்தம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் உணவியல் நிபுணர்களும் கூறுகின்றனர். உங்கள் நுரையீரலில் சிக்கியிருக்கும் கார்பன் துகள்களை அகற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயமாகும். சுற்று சூழல் மாசு காரணமாக, ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வாக அமைகிறது. வெல்லம் ஒரு இயற்கை இனிப்பு என்று அறியப்படுகிறது. சுவாசம் அல்லது நுரையீரல் தொடர்பான கோளாறுகள் வரும் போது, இது ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.
இரத்த சோகை நீங்கும்
வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், எனர்ஜி, சர்க்கரை போன்ற சத்துக்கள் இருப்பதால், பல பிரச்சனைகளில் இருந்து காத்து ஆரோக்கியத்தை வழங்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே, வெல்லம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கலாம்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்
வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்குவதில் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம், உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தவிர்க்கலாம். வெல்லத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.
வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை
வெல்லத்தை பானகமாக தயாரித்து குடிக்கலாம். வெல்லம், நெய், கருப்பட்டி கலந்த லட்டுக்களை செய்து சாப்பிடுவதும் சிறந்தது. அதோடு, சாப்பிட்டவுடன் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதும் பலன் கொடுக்கும். எனினும் எப்போதும் ரசாயனம் இல்லாத வெல்லத்தை பயன்படுத்துங்கள். அப்போது தான் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை அடைய முடியும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ