மனிதர்களின் உடலில் மூட்டுவலி ஏற்பட்டால் அவர்கள் இல்லாத அவதிப்படுவார்கள். நடப்பது, அமர்வது என எதையும் அவர்களால் எளிதில் செய்ய முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வரும் மூட்டுவலி அவர்களை வேதனையின் உச்சத்தில் ஆழ்த்தும். இதனைப் போக்குவதற்கு பலர் பல வைத்தியங்களை செய்தாலும் எளிமையான வீட்டு வைத்தியத்திலேயே மூட்டு வலியை போக்குவதற்கு வழிகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:


ஆப்பிள் சைடர் வினிகர்:


ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தரும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம்.


இஞ்சி சாறு:


இஞ்சியில்  ஜின்ஜெரோல் எனப்படும் ஒரு கலவை இருக்கிறது. இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.



எப்சம் உப்பு:


எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது, இவை ஒரு வலி நிவாரணி ஆகும். இது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கிறது. ஒரு பக்கெட் குளியல்  நீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பை வைத்து அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைத்தால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


மேலும் படிக்க | Raw Milk: பசும்பால் குடிப்பது நல்லதா, கெடுதலா; ஷாகிங் உண்மை


மஞ்சள்:


சக்திவாய்ந்த ஆண்டிசெப்டிக் கலவை என்று அறியப்படும் மஞ்சள் குர்குமின் கொண்டிருப்பதால் வலியைக் குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவவும்.



ஐஸ் கட்டி:


ஐஸ் கட்டிகளைப் ஒரு துணியில் சுற்றி முழங்காலில் வலி உள்ள இடத்தில் ஒரு பத்து  நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கலாம், இவ்வாறு செய்வது வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழங்கால்களில் வீக்கத்தையும் குறைக்கிறது.


மேலும் படிக்க | இந்த வைட்டமின் குறைப்பாடால் முடி வெள்ளையாக மாறுமாம்


மேற்கூறியவை எளிமையான வீட்டு வைத்தியங்கள்தான் என்றாலும் இதுகுறித்து மருத்துவரிடமும் ஒருமுறை ஆலோசனையை பெற்றுக்கொள்வது சிறந்தது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR