இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக, நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்நிலையில், சில உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுவது இந்த பிரச்சனையை தீர்க்கும். உலர் பழங்களின் நன்மைகள் ஊறவைத்த பிறகு இரட்டிப்பாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த உலர் பழங்கள் பல நோய்களுக்கு மருந்தாக வேலை செய்கின்றன. உலர் பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை. இனிப்புகள், ஸ்மூத்தி மற்றும் ஓட்மீல்களில் அவற்றைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலுக்கு முடிவு கட்டலாம். ஊறவைத்த பின் சாப்பிட்டால் பலன் தரும் சில உலர் பழங்களைப் பற்றி இங்கு கூறுகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீழ்கண்ட 5 உலர் பழங்கள் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பையும், கெட்ட கொலஸ்ட்ராலையும் கரைத்து விடும்.


பாதம் பருப்பு


வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளதால், பாதாம் உலகின் சிறந்த உலர் பழங்களில் ஒன்றாகும். பலர் அவற்றை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடுகிறார்கள். சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பாதாம் பருப்பு உதவும். பாதாம் பருப்பில் இருந்து அதிக பலன் பெற, அவற்றை ஊறவைத்து தோல் நீக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவை இரவு முழுவதும் அல்லது 6-8 மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.


வாதுமை பருப்பு


கொலஸ்ட்ரால் மட்டுமின்றி, இருமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன் வாதுமை பருப்பு உங்கள் மூளையை கூர்மையாக்கும். இந்த பருப்பில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாதுமை பருப்பில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களின் அளவும் ஒரு நபரின் எடையைக் குறைக்க உதவும். எனவே, ஆரோக்கியமான உடலை பெற, இந்த உலர் பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், பால் அல்லது சுத்தமான தண்ணீரில் ஊறவைப்பதே சிறந்த வழி.


உலர் திராட்சை


கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஊறவைத்த திராட்சையை சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? திராட்சைகள் இயற்கையில் உடலுக்கு சூட்டை கொடுக்க கூடியவை. அவற்றை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் முதலில் சாப்பிடும்போது, ​​​​கொழுப்பைக் கரைத்து மலத்தைத் தளர்த்தும். ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவதும் சில உணவுப் பொருட்களால் ஏற்படும் அமிலத்தன்மையை நீக்குகிறது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவலைப்படாம மாம்பழம் சாப்பிடலாம்... ‘இதை’ மட்டும் கவனத்தில் கொள்ளவும்!


அத்திப்பழம்


அத்திப்பழம் யார் வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உலர் பழம். நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அதிக கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுகிறது. ஊறவைத்து சாப்பிடுங்கள். PCOS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உலர் பழத்தை ஊறவைத்து உட்கொள்ள தீர்வு கிடைக்கும். இது குடல் இயக்கம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


பேரீச்சம் பழம்


பேரீச்சம் பழம் என்னும் அதிசய உலர் பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. இதில், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. பேரீச்சம்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. மேலும், பேரீச்சம்பழத்தில் உள்ள கரிம கந்தகத்தின் அளவு பருவகால ஒவ்வாமைகளைத் தடுக்க உதவும். ஊறவைத்த பேரீச்சம்பழத்தின் நன்மைகளைப் பற்றி கூறுகையில், ​​இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க பேரிச்சம்பழம் உதவும் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், ஒருவர் அதிகமாக மது அருந்தியிருந்தால், ஊறவைத்த பேரீச்சம்பழம் சிறந்த ஹேங்கொவர் உணவாக செயல்படுவதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | Diabetes Control: இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா மூலிகையை ‘இப்படி’ பயன்படுத்தவும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ