உங்கள் உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை எரிப்பதாகக் கூறும் எந்தவொரு உணவுப் பொருள் அல்லது தொடர்புடைய பொருள் கொழுப்பை எரிக்கும் உணவு அல்லது எடை இழப்பு மாத்திரைகள் என்று குறிப்பிடப்படுகிறது. யஷ்வந்த்பூரில் உள்ள, கொலம்பியா ஆசியா ரெஃபரல் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் திருமதி பவித்ரா என் ராஜ் இது குறுத்து கூறுகையில், "வயதானால், குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு, உடலின் மெட்டபாலிசம் குறைந்து, எடை கூடுகிறது. எனவே, மக்கள் கொழுப்பை எரிக்கும் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்க, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த அல்லது அதிகரிக்க, உடல் கொழுப்பை உறிஞ்சுதலைக் குறைக்க அல்லது அதனை எரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு. உடல் அதிக கொழுப்பை எரிக்க இவை உதவுகின்றன" என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொழுப்பை எரிக்க சிலர்  இயற்கையாக  முயற்சி செய்கின்றனர். சிலர் சப்ளிமெண்ட்ஸ் அல்லது மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், சில சமயங்களில் அவை  பயனற்றதாகவோ அல்லது மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தானதாகவோ இருக்கலாம். உணவியல் நிபுணர் பவித்ரா என் ராஜ் கொழுப்புச் சத்துகள் மற்றும் அவற்றின் பக்க விளைவுகள் பற்றி அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். 


கொழுப்பு சப்ளிமெண்ட்ஸ் அல்லது மாத்திரைகள்


பொதுவாக, சப்ளிமெண்ட்ஸ் அல்லது மாத்திரைகள் பசியைக் குறைக்கும், கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கும், கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கும். சில மாத்திரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


கார்சீனியா கம்போஜியா (Garcinia Cambogia)


பழத்தில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் உள்ளது, இது கார்சீனியா கம்போஜியா சாற்றில் செயல்படும் பொருளாகும்.  இது டயட் மாத்திரையாக விற்பனை செய்யப்படுகிறது.


குளுக்கோமன்னன் (Glucomannan)


சேனைக்கிழங்கின் வேர்களில் காணப்படும் நார் வகை. குளுக்கோமன்னன் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற பொருளாக மாறுகிறது. இது குடலில் அமர்ந்து வயிறு நிறைந்த உணர்வை தருகிறது, குறைந்த கலோரிகளை உட்கொள்ள உதவுகிறது.


மேலும் படிக்க | எடை இழப்பு முதல் குடல் ஆரோக்கியம் வரை... இந்துப்பு செய்யும் அதிசயங்கள்!


எடை இழப்பு மாத்திரைகளின் சில பக்க விளைவுகள்


ஒவ்வாமை: மாத்திரைகளின் பொதுவான அறிகுறிகளில் சில தோல் ஒவ்வாமை, அரிப்பு, வயிற்று உபாதைகள் போன்றவை.


தூக்கமின்மை: கொழுப்பை எரிக்க பயன்படும்  காஃபின் தூக்க முறைகளை மாற்றுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும், தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.


உயர் இரத்த அழுத்தம்: வேகமான வளர்சிதை மாற்றத்தின் விளைவாக இதயம் வேகமாக உந்தப்படுவதற்கு வழிவகுக்கும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.


நடத்தை மாற்றம்: மனநிலை மாற்றங்கள், பதற்றம் அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், உணர்ச்சி மாற்றங்கள், எரிச்சல், ஆகியவற்றைக் காண்பது பொதுவானது.


வயிற்றுப் பிரச்சனைகள்: கொழுப்பை எரிப்பதால் வாயு அல்லது வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் குடல் இயக்கத்தி பாதிப்பு  ஆகியவை ஏற்படலாம். சில சமயங்களில் மலக்குடல்  பிரச்சனைகள், இரத்தப்போக்குடன் கருப்பு மலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.


சிறுநீரக பிரச்சனைகள்: இந்த டயட் மாத்திரைகளில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும்.


ஊட்டச்சத்து குறைபாடு: காஃபின் அல்லது டானின் அதிகப்படியான நுகர்வு, வைட்டமின் பி12, இரும்பு போன்ற சில வைட்டமின்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.


கொழுபை எரிக்கும் இயற்கை உணவுகள்


இந்த பக்க விளைவுகளைத் தவிர்க்க நீங்கள் கீழ்க்கண்ட இயற்கையான கொழுப்பை எரிக்கும் உணவுகளை தேர்வுசெய்யலாம்:


காஃபின்


காபீன் உள்ள காபி மற்றும் இதர உணவுகள் பானங்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் அதிக கொழுப்பை எரிக்க உதவுகிறது.


கிரீன் டீ


கிரீன் டீ சாற்றில் உள்ள பாலிபினால் எபிகல்லோகேடசின் கேலேட் கொழுப்பை எரிக்க உதவுகிறது.


கரையக்கூடிய நார்ச்சத்து


கரையக் கூடிய நார்சத்து உள்ள உணவுகள், செரிமான மண்டலத்தில் உள்ள தண்ணீரை உறிஞ்சி, ஒரு பிசுபிசுப்பான ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது, இது பசியை ஏற்படுத்தும் ஹார்மோன் கிரெலின் அளவைக் குறைக்க உதவுகிறது.


ஆப்பிள் சாறு வினிகர்


ஆப்பிள் வினிகர் என்பது ஆப்பிளை நசுக்கி, ஆப்பிள் சாற்றை புளிக்கவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள அசிட்டிக் அமிலம் எடை இழப்புக்கு பங்களிக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகரின் நுகர்வு பசியையும் அடக்குகிறது. பசி குறைவதால், குறைவாக சாப்பிடுவோம். இதனால் கலோரிகள் எடுத்துக் கொள்வது குறைந்து, இறுதியாக எடை இழப்புக்கு பங்களிக்கிறது.