முந்திரி பருப்பை ஊறவைத்து... தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் 'இந்த' 4 நன்மைகள்!

Health Benefits Of Soaked Cashews: முந்திரி பருப்பை நன்கு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அதனை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நான்கு நன்மைகளை இங்கு காணலாம்.  

முந்திரி பருப்பு (Cashews) விலை அதிகம் என்றாலும் அதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். இனிப்புகளில் அதாவது பாயாசம், லட்டு ஆகியவற்றில் முந்திரிகளை அதிகமாக பயன்படுத்துவார்கள். ஆனால், அதே முந்திரியை நீங்கள் தனியாக, பச்சையாக எடுத்துக்கொள்வதும் நல்லது. அந்த வகையில், அதனை தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக பார்க்கப்போகிறோம். 

 

1 /8

முந்திரி பருப்பில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை எப்போது எடுத்துக்கொண்டாலும் நல்லது என்றாலும் காலையில் சாப்பிட்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.   

2 /8

அதுவும் முந்திரி பருப்பை நீரில் ஊறவைத்து (Soaked Cashews) அதில் 5-6 பருப்புகளை மட்டும் தினமும் காலையில் உட்கொள்வது நல்லது. ஊறவைத்த முந்திரியில் வைட்டமின்கள், பொட்டாஸியம், மேக்னீஸியம் உள்ளிட்டவை இருக்கும்.   

3 /8

அந்த வகையில், தினமும் காலையில் நீரில் ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிட்டால் கிடைக்கும் நான்கு நன்மைகளை (Health Benefits) இங்கு காணலாம்.   

4 /8

அதிக புரதம்: நீங்கள் ஜிம் செல்பவராக, உடல்எடை குறைக்க முயல்பவர் எனில் உங்கள் உணவுமுறையில் இது சிறந்த தேர்வாகும். ஊறவைத்த முந்திரி பருப்பில் புரதச்சத்து அதிகம் இருக்கும்.   

5 /8

ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும்:  இதில் பொட்டாஸியம், மேக்னீஸியம் மட்டுமின்றி தாமிரம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட கனிமங்களும், வைட்டமிண் K மற்றும் E ஆகியவையும் உள்ளன. இதனால் உங்களுக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்கும். ஆற்றலை அதிகரிக்கவும், சரும பாதுகாப்பிற்கும் இது கூடுதலாக உதவும்.  

6 /8

செரிமானத்திற்கு நல்லது: ஊறவைத்த முந்திரி பருப்பில் இயற்கையாகவே ஃபைபர் நிறைந்திருக்கும். இதனால் செரிமானம் சீராக இருக்கும். குடல் இயக்கமும் ஆரோக்கியமாக இருக்கும்.   

7 /8

இதயத்திற்கு சிறந்தது: ஊறவைத்த முந்திரி பருப்பில் இதயத்திற்கு ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும். இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்து பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.