உடற்பயிற்சி செய்யாமல் ஒரு நாளில் 1300 கலோரிகளை எரிப்பது எப்படி...!!
Weight Loss Tips: அதிகபட்ச கலோரிகளை எரிப்பதில் தான் உடல் எடையை குறைக்கும் மந்திரம் அடங்கி உள்ளது. கலோரிகளை அதிகம் எரிக்க நினைப்பவர்களுக்கு உடற்பயிற்சி தான் முதலில் ஞாபகம் வரும்.
எடை இழப்பு முயற்சி என்பது ஒரு தொடர் செயல்முறையாகும், சரியான நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணிக்காமல் ஒருவர் அந்த சரியான பலனை அடைய முடியாது. எடை இழப்பு பற்றி பேசும்போது என்ன நினைவுக்கு வருகிறது? டம்பெல்ஸ், ஜிம் யோகா பாய்கள் மற்றும் கலோரி குறைவாக உள்ள உணவு. ஒவ்வொரு நாளும் அதிகபட்ச கலோரிகளை எரிப்பதில் தான் உடல் எடையை குறைக்கும் மந்திரம் அடங்கி உள்ளது. கலோரிகளை அதிகம் எரிக்க நினைப்பவர்களுக்கு உடற்பயிற்சி தான் முதலில் ஞாபகம் வரும். உடற்பயிற்சி செய்யும் போது மட்டுமே கலோரிகளை அதிகம் முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் தினமும் 1300 கலோரிகளை எரிக்க முடியும்.
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?
வீட்டை பெருக்குவது, வீட்டை சுத்தம் செய்வது ஆகியவை உங்கள் உடலின் கலோரிகளை அதிக அளவில் எரிக்கும். எடையை திறம்பட குறைக்கும் திறனை விரைவுபடுத்தும். எனவே நீங்கள் அந்த உடல் பருமனை, கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உடற்பயிற்சி செய்யாமல் 1300 கலோரிகளை எரிக்க மற்றொரு வழியைக் கண்டறிய இந்தக் கட்டுரை உதவும்.
தினமும் 1300ன் கலோரிகளை எரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பதற்கான மந்திரம் உங்களால் முடிந்தவரை உங்கள் அன்றாட வழக்கத்தில் பல உடல் இயக்கங்களைச் சேர்ப்பதாகும்.
1. முதலில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம். நீங்கள் தொலைபேசியில் பேசும் போது நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
2. லிஃப்டில் செல்வதற்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும். இது உங்கள் கால்களுக்கு (குறிப்பாக உங்கள் உள் தொடைகளுக்கு) ஒரு சிறந்த பயிற்சியாகும்.
மேலும் படிக்க | எப்போதாவது வெள்ளை வெங்காயம் சாப்பிட்டிருக்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும்
3. இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் சில நேரங்களில் உங்கள் துணிகளைக் சுத்தம் செய்யவும்.
4. உங்கள் வீட்டை தினமும் சுத்தம் செய்யுங்கள். ஹால், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு சமையலறை உட்பட ஒரு வீட்டை சுத்தம் செய்வது 830 கலோரிகளை எரிக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒரு மணி நேரம் 30 நிமிட HIIT க்கு சமம்.
5. ஒரு பெரிய வீட்டைப் பொறுத்தவரை, மூன்று படுக்கையறைகள், ஒரு ஹால் மற்றும் ஒரு சமையலறையை சுத்தம் செய்வதை பொறுத்தவரை, ஒரு முறை சுத்தம் செய்வது 1311 கலோரிகளை எரிக்க உதவும்.
6. மேலும், நீங்கள் மூன்று அறைகள் மற்றும் ஒரு சமையலறையை மட்டும் சுத்தம் செய்தால், 276 கலோரிகள் வரை எரிக்கப்படும், இது 40 நிமிடங்களுக்கு குறைவாக ஜாகிங் செய்வதற்கு சமம்.
7. வீட்டை ஆழமாக சுத்தம் செய்யும் போது குனிந்து நிமிர்ந்து மொழுகும் போது, உடல் பருமன குறைவதோடு, நுரையீரல் ஆரோக்கியமும் மேம்படும் என அறிவுறுத்தப்படுகிறது. இது உங்கள் பிட்டம் மற்றும் கால்களைச் சுற்றியுள்ள உங்கள் தசைகளுக்கு நன்றாக வேலை செய்கிறது.
8. தினமும் காலையிலும் மாலையிலும் (இரவு உணவுக்குப் பிறகு) நடைப்பயிற்சிக்குச் செல்லுங்கள். இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது, இது எடை இழப்புக்கு பங்களிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா? இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ