நரைமுடி பிரச்சனையா... முடியை இயற்கையாக கருமையாக்க செய்ய வேண்டியவை!
நரை முடி பிரச்சனை இருப்பவர்கள், பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் செல்வதைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால், முடியை கருமையாக்கும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரை ஏற்பட்டு விடுகிறது. வயதானால் நரைக்க தொடங்கும் என்ற காலம் மலை ஏறி விட்டது. இதனால், நரை முடி பிரச்சனை இருப்பவர்கள், பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழந்து வெளியில் செல்வதைத் தவிர்க்கிறார்கள். உங்களுக்கும் இது போன்ற பிரச்சனை இருந்தால், முடியை கருமையாக்கும் இயற்கை வழிகளை அறிந்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி தலை முடியை இராசாயன டை பூசாமல் கருமையாக்கலாம். அந்த எளிய வீட்டு வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போம்.
முட்டை
புரோட்டீன் குறைபாடும் முடி உதிர்வதற்கும், நரைப்பதற்கும் முக்கிய காரணமாகும். இந்தக் குறைபாட்டைப் போக்க முட்டை கலவையை தயாரித்து முடியில் தடவ வேண்டும். முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. இந்த கலவையில் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து நன்றாக ஒரு பேஸ்டாக தயார் செய்யவும். இதற்குப் பிறகு, இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவவும். வாரத்திற்கு 2 - 3 முறை இதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்பத்தில், இந்த கலவையை 20 - 25 நிமிடங்கள் தடவி, பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதற்குப் பிறகு நீங்கள் 4 - 5 மணி நேரம் வரை கூட வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி நரையாவதை தடுக்கலாம்.
தேங்காய் எண்ணெய் - எலுமிச்சை சாறு கலவை
நரை முடியை போக்க மிகவும் பாதுகாப்பான இயற்கை தீர்வாகும். 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்த ஒரு கலவையை தயாரிக்கவும். இதற்குப் பிறகு, இந்த கலவையை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்யவும். இவ்வாறு தயாரிக்கப்படும் கலவையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வேர்களை வலுப்படுத்தி, நரை முடி உருவாவதைத் தடுக்கிறது. இந்த கலவை தலையின் நரம்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால், ஒற்றைத் தலைவலி மற்றும் சாதாரண தலைவலியிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
கறிவேப்பிலை
கறிவேப்பிலை பொதுவாக சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு ஆயுர்வேத பயன்களும் உண்டு. கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, முடியின் வேர்களின் வலுவடைகிறது. அதைப் பயன்படுத்த, தேங்காய் எண்னெயில், சிறிது கறிவேப்பிலையைப் போட்டு சூடாக்கவும். இலைகள் சூடாகி வெடிக்கத் தொடங்கும் போது, அடுப்பை அணைத்து விடவும். அதைக் கொண்டு முடியை மசாஜ் செய்யவும். சுமார் அரை மணி நேரம் கழித்து, உங்கள் தலையை சுத்தமான தண்ணீரில் கழுவவும். வாரம் இருமுறை இந்த முறையை கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் தலையில் உள்ள முடி முன்பு போல் வலுவடையும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை இயற்கையான முறையில் கருமையாக்கலாம். இதற்கு நெல்லிக்காய் சாறு எடுக்க வேண்டும். பிறகு அந்த சாற்றை தேங்காய் எண்ணெயில் கலக்கவும். பிறகு அந்த கலவையை முடியில் தடவி 4-5 மணி நேரம் அப்படியே விடவும். பின்னர், சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த கலவையை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவதன் மூலம், முடிக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
மருதாணி மற்றும் பிரியாணி இலைகள்
இயற்கையான முறையில் முடி நிறத்தை கருமையாக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, பின்னர் அதில் பிரியாணி இலை மற்றும் மருதாணி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் இறக்கி ஆறவைத்து வடிகட்டவும். இதற்குப் பிறகு, முடியைக் சுத்தம் செய்த பின், இந்த தண்ணீரை அவற்றின் மீது தடவவும். இந்த கலவையை வாரம் ஒருமுறை தடவினால், கூந்தல் முன்பு போல் கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்!