உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி  எவ்வளவு முக்கியமோ, அதே போன்று, டயட்டும் முக்கியம். நாம் உண்ணும் உணவுகள் எடை இழப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. பப்பாளியை உணவில் சேர்ப்பது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. பப்பாளியில் காணப்படும் பல சத்துக்கள் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. பப்பாளியில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளதால்,  உடலில் சேரும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது. வயிறு கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட வேண்டும். பல மணிநேரம் ஜிம்மில் ஈடுபடும் அதே பலனை பப்பாளியை டயட்டில் சேர்ப்பதன் மூலம் பெறலாம். எடை இழப்புக்கு பழங்களில் பப்பாளியை விட சிறந்தது எதுவுமில்லை. எடை இழப்புக்கு இது சிறந்த பழமாக கருதப்படுகிறது. இருப்பினும், உடல் பருனை குறைக்க சரியான நேரத்தில் மற்றும் சரியான வகையில் பப்பாளியை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பப்பாளியில் உள்ள ஊட்டசத்துக்கள்


தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான காலை உணவு பற்றி சிந்திக்கும் நபர்களுக்கு பப்பாளி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் பப்பாளி பழத்தில் நிறைந்துள்ளது. பப்பாளியில் பப்பேன் என்ற என்சைம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


காலை உணவில் பப்பாளி கட்டாயம் இருக்க வேண்டும்


உடல் பருமனை குறைக்க, (Weight Loss Tips) தினமும் காலை உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குவதோடு, படிப்படியாக அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும். பப்பாளியை துண்டுகளாக நறுக்கி காலை உணவாக சாப்பிடுங்கள். சுவையை அதிகரிக்க, கருப்பு உப்பு, சாட் மசாலா மற்றும் கருப்பு மிளகு சேர்த்து பப்பாளியை சாப்பிடலாம்.


பப்பாளி சாறு குடிக்கவும்


உடல் எடையை குறைக்க, உங்கள் உணவில் பப்பாளி சாற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளி ஜூஸ் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு குறையும். பப்பாளியில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பைக் குறைத்து பிட்னஸை மேம்படுத்த உதவுகிறது. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பப்பாளியை கட்டாயம் சாப்பிட வேண்டும். பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கும் குட்பை சொல்லலாம்.


மேலும் படிக்க | ஆரஞ்சு பழத்தில் இருக்கு உங்கள் எடை இழப்பு ரகசியம்: இப்படி சாப்பிடுங்க


பால் மற்றும் பப்பாளி


காலை உணவுக்கு வயிறு நிறம்பும் உணவை உணவு ஒன்றை நீங்கள் சாப்பிட விரும்பினால், பால் மற்றும் பப்பாளி நன்மை பயக்கும். இதற்கு பால் மற்றும் பப்பாளியை மிக்ஸியில் போட்டு கலக்கவும். மேலும் அதில் சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்க்கவும். இதனால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். பப்பாளியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும்.


பப்பாளி மற்றும் தயிர்


தயிர் மற்றும் பப்பாளி எடை இழப்புக்கு நன்மை பயக்கும். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதனால் உடல் பருமனும் குறைகிறது. பப்பாளியை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். தயிர் ஒரு கிண்ணத்தில், பப்பாளி துண்டுகள் மற்றும் உலர் பழங்கள் கலந்து சாப்பிடுவது உங்கள் வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். உங்கள் விரைவாக எடையைக் குறைக்கும்.


பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 


மேலும் படிக்க | Health Alert: புரத பவுடரை அதிகமா சேர்த்துகிட்டா என்னவெல்லாம் பிரச்சனை வரும்? பகீர் தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ