டீ, காபி குடிக்காமல் இருக்க முடியவில்லையா.. பரவாயில்லை இதை கடைபிடியுங்கள்!
காபி, டீ குடிக்காமல் ஒரு நாளை துவக்குவது என்பது பலருக்கும் முடியாத காரியமாகத் தான் உள்ளது. சிலருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.
காபி, டீ குடிக்காமல் ஒரு நாளை துவக்குவது என்பது பலருக்கும் முடியாத காரியமாகத் தான் உள்ளது. சிலருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.
காபியில் காஃபின் இருப்பது அனைவரும் அறிந்ததே, அதிக அளவில் டீ குடிப்பதும் உங்களுக்கு மிகவும் ஆபத்தானது. இத்தகைய சூழ்நிலையில், டீ அல்லது காபி உங்களுக்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கடை பிடிக்கலாம்.
எந்த நேரத்திலும் டீ குடிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தேநீர் குடிப்பதற்கு முன்பு குடிநீர் அருந்தினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் வெகுவாக குறையும்.
தண்ணீர் அருந்துவதால் பற்கள் பாதுகாப்பாக இருக்கும் . தேநீர் மற்றும் காபியில் டானின் என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது, இது பற்களில் ஒரு அடுக்கை ஏற்படுத்தி பாதிக்கிறது. இந்த விஷயத்தில், நீங்கள் தேநீர் அல்லது காபி குடிப்பதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், இந்த அடுக்கு பற்களில் உருவாகாது.
தண்ணீர் அருந்துவது உடலை ஹைட்ரேட் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காபி குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது . அதனால், ஒரு கிளாஸ் தண்ணீரைக் டீ, காபி குடிப்பதற்கு முன்பு, எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும்.
அமிலத்தன்மை - அதிக தேநீர் அல்லது காபி குடிப்பதால் அமிலத்தன்மை ஏற்படுகிறது. ஆனால் அவற்றைக் குடிப்பதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடித்தால், அமிலதன்மை ஏற்பாடாமல் தடுக்கும்.
புண்களிலிருந்து பாதுகாக்கிறது - காபி மற்றும் தேநீர் அதிக அமில அளவைக் கொண்டிருக்கின்றன, இது உடலில் புண்கள் ஏற்பட வழிவகுக்கிறது. காபி, தேநீர் குடிப்பதற்கு முன்பு தண்ணீரை உட்கொள்வது அமிலம் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைத்து புண்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
ALSO READ | பதஞ்சலியின் Coronil: WHO திட்டத்தின் கீழ் சான்றிதழ் அளித்தது ஆயுஷ் அமைச்சகம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR