பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான குரு ராம்தேவ், ஆயுர்வேத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட COVID-19 க்கான மருந்தான கொரோனில் (Coronil) குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை தனது அமைப்பின் சார்பில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பதஞ்சலி தனது ஆயுர்வேத மருத்துவத்தால் கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று கூறியது. இந்த கூற்றுக்கள் குறித்த சில சர்ச்சைகளைத் தொடர்ந்து, பதஞ்சலியின் கொரோனில் கிட் ஒரு 'நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்' என்ற வகையில் உரிமம் பெற்றது.
ALSO READ | Coronil: கொரோனா வைரசுக்கான புதிய மருந்தை அறிமுகப்படுத்தினார் பாபா ராம்தேவ்
உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோகபீடத்தில் மூன்று ஆயுர்வேத மருந்துகளின் கிட் ஒன்றை அறிமுகப்படுத்திய யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி ஆராய்ச்சி மையம் மற்றும் NIMS-ன் ஒருங்கிணைந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட முதல் ஆயுர்வேத, மருத்துவ ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட, சோதனை அடிப்படையிலான சான்றுகள் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்த மருந்து, 3-7 நாட்களுக்குள் 100 சதவீதம் COVID-19 நோயை குணப்படுத்தும் என்றும் ராம்தேவ் கூறியிருந்தார்.
உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றி, கொரோனில் எனப்படும் கோவிட் -19 சிகிச்சைக்கான மருத்திற்கு, ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து சான்றிதழ் பெற்றுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் தெரிவித்துள்ளது. COVID-19 சிகிச்சையில் கொரோனில் செயல்திறனை உறுதிபடுத்தும் ஆராய்ச்சி தகவல்களை இன்று பதஞ்சலி வெளியிட்டது.
மத்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகம் இதற்கு முன்னர் ஆயுர்வேத கொரோனில் மாத்திரைகளை 'இம்யூனோ-பூஸ்டர்' அதாவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து என வகைப்படுத்தியது. இப்போது, இது "கோவிட் -19 சிகிச்சைக்கு உதவும்" ஒரு மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று ராம்தேவ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ALSO READ | கொரோனில் கொரோனாவை குணப்படுத்தும்.... அடித்து கூறுகிறார் பாபா ராம்தேவ்..!!!