கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இது உடலின் பல பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இது அதிக பிபி மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நைஜெல்லா விதைகளை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். கூடுதலாக, இது எடை இழப்புக்கு வியக்க தக்க வகையில் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பு எரிகிறது. வயிற்றில் படிந்திருக்கும் கொழுப்பைக் கரைக்கும். நீங்கள் உடல் பருமனை குறைக்க விரும்பினால்,எடை இழப்புக்கு கருஞ்சீரகத்தை எப்படி சாப்பிடுவது என்று தெரிந்து கொள்வோம்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. கருஞ்சீரகம் தூள் மற்றும் சூடான தண்ணீர்


முதலில் 5 முதல் 10 கருஞ்சீரகத்தை எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீரில் கருஞ்சீரக தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் மிக குறைந்த அளவு சர்க்கரை சேர்க்கவும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதனால் உங்கள் எடையை வேகமாக (Weight Loss Tips) குறைக்கலாம்.


2. கருஞ்சீரகம் மற்றும் எலுமிச்சை


எடை இழப்புக்கு நீங்கள் கருஞ்சீரகம் மற்றும் எலுமிச்சை சாப்பிடலாம். இதற்கு, ஒரு பாத்திரத்தில் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும். இப்போது ஓரிரு நாட்கள் வெயிலில் வைக்கவும். 5-6 விதைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். இதனால் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம்.


மேலும் படிக்க | சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை அகற்றும் ‘சூப்பர்’ பானங்கள்... தயாரிக்கும் முறை..!


3. கருஞ்சீரகம் மற்றும் தேன்


கருஞ்சீரகத்தை தேனுடன் உட்கொள்வதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம். இதைச் செய்ய, ஒரு கிளாஸ் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கருஞ்சீரக பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். இது தொப்பையைக் குறைத்து, எடையைக் குறைக்க உதவும்.


4. கருஞ்சீரக தேநீர்


உடல் எடையை குறைக்க கருஞ்சீரக டீயை உட்கொள்ளலாம். கருஞ்சீரக தேநீர் தயாரிக்க, ஒரு கப் தண்ணீரை சூடாக்கவும். அதில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி பருகவும். இந்த டீயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கலாம்.


எடை இழப்புக்கு நீங்கள் கருஞ்சீரகத்தை உட்கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே அதை உட்கொள்ளவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கறிவேப்பிலை: தலை முதல் கால் வரை.... ஒரே இலை ஓராயிரம் நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ